»   »  16 வருடங்களுக்குப் பிறகு... மீண்டும் நடிக்க வரும் அலியா பட்டின் அக்கா!

16 வருடங்களுக்குப் பிறகு... மீண்டும் நடிக்க வரும் அலியா பட்டின் அக்கா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் அலியா பட்டின் அக்காவான நடிகை பூஜா பட்.

இந்தியில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை பூஜா பட். தமிழில் இவர் நடிகர் அஜித் ஜோடியாக கல்லூரி வாசல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பிரசாந்த், தேவயானி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

தமிழில் ஒரு படமே நடித்தபோதும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அறிமுகம்...

மிகக்குறைந்த வயதிலேயே தனது தந்தையின் இயக்கத்தில் டாடி என்ற படத்தில் அறிமுகமானார் பூஜா. பெரும்பாலும் தந்தையின் இயக்கத்தில் நடித்து வந்த பூஜா, தனது 21வது வயதில் இந்தியாவின் இளம் தயாரிப்பாளர் என்ற பெருமையுடன் சினிமா தயாரிப்பிலும் ஆர்வம் காட்டினார்.

இயக்குநர் ஆனார்...

கடந்த 2001ம் ஆண்டு எவ்ரிபடி சேஸ் ஐம் பைன் என்ற படத்தோடு, நடிப்பிற்கு முழுக்குப் போட்ட பூஜா, பின்னர் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

44 வயதினிலே...

இந்நிலையில், தற்போது 44 வயதாகும் பூஜா, விரைவில் ஒரு படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். தனது அறிமுகப்படமான டாடியின் ரீமேக் மூலமாகவே அவர் தனது திரையுலக மறுபிரவேசத்தை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மறுப்பு...

சினிமா இயக்குவதில் இருந்து ஒதுங்கி விட்ட அவரது தந்தை மகேஷ் பட், இந்த படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அத்தகவலை பூஜா பட் மறுத்துள்ளார்.

சகோதரி...

தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் அலியா பட், பூஜா பட்டின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood filmmaker-actor Pooja Bhatt is all set to make her acting comeback after a gap of 16 years in a film, written by her father Mahesh Bhatt.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos