»   »  வெற்றித் திருமகள் 'தேவி': விஜய்க்கு ஆடி காரை பரிசளித்த பிரபுதேவா

வெற்றித் திருமகள் 'தேவி': விஜய்க்கு ஆடி காரை பரிசளித்த பிரபுதேவா

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவி படம் வெற்றி பெற்றுள்ளதையடுத்து தயாரிப்பாளர்களான பிரபுதேவா மற்றும் கே. கணேஷ் இயக்குனர் விஜய்க்கு ஆடி காரை பரிசளித்துள்ளனர்.

இயக்குனர் ஏ.எல். விஜய் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோரை வைத்து தேவி படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட்டார்.


Prabhu Deva gifts Audi car to AL Vijay

ஒரு வெற்றி கிடைக்காதா என விஜய் ஏங்கிய நேரத்தில் தேவி படம் மூன்று மொழிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. பல காலம் கழித்து ஹீரோவாக நடித்த பிரபுதேவா இதனால் மகிழ்ச்சியில் உள்ளார்.


விஜய்யை நம்பி படத்தை தயாரித்தார் பிரபுதேவா. இந்நிலையில் தேவி தயாரிப்பாளர்களான பிரபுதேவா மற்றும் டாக்டர் கே. கணேஷ் ஆகியோர் விஜய்யை பாராட்டும் வகையில் அவருக்கு ஆடி காரை பரிசாக அளித்துள்ளனர்.


விஜய் தற்போது ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Devi producers Prabhu Deva and K. Ganesh have presented a Audi car to director AL Vijay appreciating his last project.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos