twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரகாஷ்ராஜுக்கு அல்சைமர்?

    By Shankar
    |

    நமக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது முதலில் தலைப்பை படித்ததும். உள்ளே படித்தால் தான் தெரிகிறது பிரகாஷ்ராஜ் அல்சைமர் நோயாளியாக நடிக்கப்போகிறார் என்று... மிஸ் லீடிங்!

    கடந்த 3 ஆம் தேதி வெளியாகி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் கன்னட படம் ‘கோதி பன்ன சாதார்ண மைகட்டு'. அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட தந்தை, தந்தையை நேசிக்கும் மகன், தந்தை ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேற மகன் தந்தையை தேடி அலைகிறான். தந்தையை மகன் அடைந்தானா? என்பதுதான் படத்தின் கதை.

    Prakash Raj to appear as Alzheimer patient

    இந்த படத்தைப் பார்த்த பிரகாஷ்ராஜுக்கு படம் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். எனவே இதை அப்படியே தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ரீமேக் பண்ண முடிவு செய்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரிடமும் பேசிவிட்டாராம்.

    படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த ஆனந்த் நாக், ரக்‌ஷிதா ஷெட்டியையே தமிழிலும் நடிக்க வைக்கப்போகிறார். அந்த முக்கியமான அல்சைமரால் பாதிக்கப்பட்ட தந்தை ரோலில் பிரகாஷ்ராஜே நடிக்கப் போகிறார். இதுதான் செய்தி.

    இந்த செய்திக்கு அல்சைமர் நோயாளியாக நடிக்கும் பிரகாஷ்ராஜ் அப்படின்னுதானே தலைப்பு வைக்கணும்... ஏன்யா பீதியை கிளப்புறீங்க?

    English summary
    Sources say that Prakash Raj is one of the best supporting role actors in South Indian film industry a will soon be seen in the role father suffering from Alzheimer’s disease.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X