»   »  இது மக்கள் விரும்பும் 'சோம்பேறித்தனம்'.. தொடர்ந்து செய்வோம்.. பிரேமம் குழு அதிரடி!

இது மக்கள் விரும்பும் 'சோம்பேறித்தனம்'.. தொடர்ந்து செய்வோம்.. பிரேமம் குழு அதிரடி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரேமம் ஓர் சோம்பேறித்தனமான படம் என்கின்ற விருதுக் குழுவினரின் விளக்கத்தை படக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட கேரளா அரசின் மாநில விருதுகளில் அனைத்து ரசிகர்களின் ஆதரவையும் ஒருசேரப் பெற்ற பிரேமம், ஒரு பிரிவில் கூட விருது பெறவில்லை.

பிரேமம் ஏன் விருது பெறவில்லை என்ற ரசிகர்களின் விமர்சனங்களுக்கு அது ஒரு சோம்பேறித்தனமான படம் என்று நடுவர் குழுத்தலைவர் விளக்கமளித்தார்.

பிரேமம்

கடந்த ஆண்டு நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் பிரேமம். வெறும் 4 கோடி செலவில் வெளியான இப்படம் திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து 60 கோடிகளைக் குவித்தது.அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது. மேலும் தமிழ்நாட்டிலும் இப்படம் 250 நாட்களை வெற்றிகரமாகக் கடந்து சாதனை படைத்தது.

கேரள அரசின்

இந்நிலையில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட கேரளா அரசின் மாநில விருதுகளில் அனைத்து ரசிகர்களின் ஆதரவையும் ஒருசேரப் பெற்ற பிரேமம் ஒரு பிரிவில் கூட விருது பெறவில்லை.

காரணம் என்ன

இப்படத்திற்கு ஏன் ஒருபிரிவில் கூட விருது வழங்கப்படவில்லை என்ற கடுமையான விமர்சனங்களுக்கு பிரேமம் படத்தை அல்போன்ஸ் சோம்பேறித்தனத்துடன் இயக்கியுள்ளார். மற்ற படங்களை ஒப்பிடும்போது பிரேமம் ஒரு வலிமையான போட்டியாளராக இல்லை. அதனால் தான் பிரேமம் ஒரு பிரிவில் கூட விருதை வெல்லவில்லை என்று நடுவர் குழுவின் தலைவர் மோகன் கூறியிருந்தார்.

பதிலடி

இந்நிலையில் பிரேமம் படத்தின் சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றிய விஷ்ணு நடுவரின் விளக்கத்துக்கு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். "நாங்கள் சோம்பேறித்தனமாகத் தான் படம் எடுத்தோம். அதனால் தான் படம் 250 நாட்களைக் கடந்து ஓடியது. படத்தில் நடித்த அத்தனை பேரும் சோம்பேறியாகவே நடித்திருந்தனர். அதிலும் இயக்குநர் தான் நம்பர் 1 சோம்பேறி.

ரசிகர்களும் சோம்பேறி

ரசிகர்களும் மிகபெரிய சோம்பேறிகள் அதனால் தான் திரும்பத்திரும்ப படத்தை திரையரங்கில் சென்று பார்த்து படத்தை 250 நாட்கள் தாண்ட வைத்தனர்.அதிலும் படத்தின் சென்சார் காப்பி இணையத்தில் வெளியான பின்னும் மக்கள் சென்று பார்த்திருக்கின்றனர் இது எவ்வளவு பெரிய சோம்பேறித்தனம். மக்கள் விரும்பும் இந்த சோம்பேறித்தனத்தை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

தொடர்ந்து

இனிமேல் தொடர்ந்து சோம்பேறித்தனமான படங்களையே தருவோம். எங்களின் கூடவே இருந்து ஆதரவு கொடுக்கும் எல்லா சோம்பேறி ரசிகர்களுக்கும் மிக்க நன்றி " இவ்வாறு கேரள அரசு மற்றும் நடுவர் குழுத்தலைவருக்கு விஷ்ணு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Read more about: premam, பிரேமம்
English summary
Premaam Sound Engineer Vishnu Govind now Slams Kerala Government in his Facebook Page.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos