twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வேண்டாம் விஷால்... வாபஸ் வாங்கிடுங்க!' - அலறும் தயாரிப்பாளர்கள்

    By Shankar
    |

    நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் என தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய சங்கங்களின் தலைமைப் பதவியை கைப்பற்றிவிட்டார் விஷால். கைப்பற்றியதோடு பல அதிரடி நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார். அந்த அதிரடிகளில் ஒன்றாக வரும் 30 ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளார். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் இதற்கு முன்பு நடந்த ஸ்ட்ரைக்கின் போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே முடங்கியது. வேலை இழந்து தவித்த தொழிலாளர்களுக்கு கஞ்சித் தொட்டி திறக்கும் நிலையே ஏற்பட்டது. அதனை சீனியர் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

    Producers say no to Vishal's cinema strike decision

    ஒரு வாரம் ஸ்ட்ரைக் நடந்தாலே கடுமையான பாதிப்புகள் ஏற்படும். விஷால் அறிவித்திருப்பது காலவரையற்ற நிறுத்தம். இதனால் நடிக, நடிகைகளின் கால்ஷீட்கள் வீணாகும். இந்த கால்ஷீட் பிரச்னையால் படப்பிடிப்பில் இருக்கும் படங்கள் முதல் திட்டமிட்ட படங்கள் வரை அனைத்துமே பாதிக்கப்படும்.

    படப்பிடிப்புகளுக்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இவை தவிர கந்துவட்டிக்கு கடன் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் படம் நிறுத்தப்பட்டால் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய விவசாயிகளின் போராட்டத்தையே கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்னையில் உடனடியாக கவனம் செலுத்தும் என்பதை எதிர்பார்க்க முடியாது.

    எனவே இத்தனை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விஷால் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுகிறது.

    English summary
    Tamil producers are feeling bad about vishal's decision to observe indefinite strike from May 30th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X