»   »  இதே வேலையா போச்சு... இணையத்தில் கசிந்தன புறம்போக்கு பாடல்கள்!

இதே வேலையா போச்சு... இணையத்தில் கசிந்தன புறம்போக்கு பாடல்கள்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

புறம்போக்கு படத்தின் பாடல்கள் இணையதளத்தில் கசிந்ததால் அப்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் புறம்போக்கு.

கோடையில்..

இப்படத்தில் ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா நாயர் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன.இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகிறது.

சோனி

இந்தப் படத்தின் பாடல்களை அடுத்த வாரம் வெளியிடுவதாக இருந்தது. புறம்போக்கு படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது.

லீக் ஆகிடுச்சி

இந்நிலையில் இணையத்தில் புறம்போக்கு பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டன. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இணையத்திலிருந்து அப்பாடல்களை நீக்க படக்குழு முயற்சி எடுத்து வருகிறது.

 

 

இதே வேலையா போச்சு..

பாடல்களை முறைப்படி வெளியிடும் முன்பே இணையத்தில் வெளியாவதும், தயாரிப்பு தரப்பு உடனே அதிர்ச்சியடைந்து அறிக்கைவிட்டு, போலீசில் புகார் செய்வதும் தொடர்கிறது.

சிவாஜி படத்திலிருந்து..

ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் பாடல்கள்தான் இப்படி முதல் முறையாக இணையத்தில் கசிந்தன. அதன் பிறகு பல படங்களின் ஆடியோ மட்டுமல்ல, வீடியோக்களே கூட இணையத்தில் கசிந்துள்ளன. சமீபத்தில் பாகுபலி படத்தின் முக்கிய வீடியோ இணையத்தில் வெளியானது நினைவிருக்கலாம்.

English summary
The audio of Purambokku has been leaked online unofficially which shocked the crew.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos