'ஐ' ரிலீஸ் தாமதத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானே காரணம்: ஆஸ்கர் ரவிச்சந்திரன்
சென்னை: ஐ படம் ரிலீஸாக தாமதம் ஆவதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் காரணம் என தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஒல்லிக்குச்சி முதல் பூசினாற் போன்ற உடம்பு என்ற பல கெட்டப்புகளில் கலக்கும் படம் ஐ. ஏமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விக்ரம் அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். ஆனால் இன்னும் ஐ படம் ரிலீஸாகவில்லை.
இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். இந்நிலையில் படம் ரிலீஸாவதில் ஏன் தாமதம் ஆகிறது என தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
பேக்கிரவுண்ட் இசை வேலையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளார். அவர் 6 ரீல்களுக்கு இசையமைத்துவிட்டார். இன்னும் 5 ரீல்களுக்கு இசையமைக்க வேண்டும். படத்திற்கு அருமையான இசையமைக்க வேண்டும் என்பதால் தான் அவர் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டுள்ளார். அவர் கடந்த 5 மாதங்களாக சென்னை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள ஸ்டுடியோவில் வேலை பார்த்து வருகிறார். படம் நிச்சயம் டிசம்பரில் ரிலீஸாகும். டிசம்பர் 25ம் தேதி ரிலீஸாகக்கூடும் என்றார்.


Click it and Unblock the Notifications











