» 

இந்திக்குப் போகிறது ராஜா ராணி - தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் ஜோடி!

Posted by:
 

தமிழில் ஹிட்டடித்த ராஜா ராணியை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். ரன்பீர் கபூர் - தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்கின்றனர்.

புது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

இதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் நடித்துள்ளனர்.

இந்திக்கேற்ற படம்

கிட்டத்தட்ட இந்திப் பட உலகுக்கேற்ற மல்டி ஸ்டார் படம் இது. மேக்கிங் ஸ்டைலும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான்.

இந்த மாதிரி கதைகள்தான் அன்று முதல் இன்றுவரை பாலிவுட்டில் பெரிதும் விரும்பி ரசிக்கப்படுகிறது.

 

ரீமேக் உண்மைகான்

ராஜா ராணி வெளியானவுடனே, இந்தப் படம் பாலிவுட்டில் ரீமேக் ஆவது உறுதி என்றுதான் திரையுலகில் பேசப்பட்டது. அதை உண்மையாக்கும் விதத்தில் இப்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இதனை அட்லி உறுதி செய்தார்.

கிங் அண்ட் குயீன்

இந்தியில் இப்படத்துக்கு ‘கிங்அன்ட் குயீன்' என பெயர் வைக்க முடிவாகியுள்ளது. ராஜா ராணி என்பதன் நேரடி ஆங்கில சொற்களையே தலைப்பாக்கியுள்ளனர்.

தீபிகா படுகோன்

ஆர்யா கேரக்டரில் ரன்பீர் கபூரும் நயன்தாரா வேடத்தில் தீபிகா படுகோனேயும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தை இயக்குவார் என தெரிகிறது. ஏற்கனவே கஜினி படத்தை இந்தியில் எடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் அங்கு பிரபலமாக உள்ளார். இப்போது பிஸ்டல் என்ற இந்திப் படத்தை எடுத்து வருகிறார். அது முடிந்ததும் கிங் அண்ட் குயீன் தொடருமாம்.

Read more about: raja rani, bollywoood, ar murugadass, ராஜா ராணி, பாலிவுட்
English summary
Raja Rani, the recently released Atlee directed hit movie is going to remake in Bollywood in the name of King and Queen.

Tamil Photos

Go to : More Photos