twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மோடியைப் பிடிக்கும்.. ஏன்னா அவர் ரஜினியின் நண்பராச்சே!' - ஒரு ஜப்பான் ரசிகரின் பேட்டி

    By Shankar
    |

    பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தின் போது, அவரை வரவேற்க வந்த ஜப்பானிய இளைஞர்கள் சிலர் ஒரு கையில் இந்தியக் கொடியையும் மறுகையில் ரஜினி - மோடி இருக்கும் படத்தையும் வைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

    ஜப்பானின் தொழில் தலைநகரான ஒசாகாவில் உள்ள ஒரு ஜபானியர் இந்திய கொடியை மார்பில் அணிந்து "ஐ லவ் இந்தியா" என்று டீ ஷர்ட் போட்டுக் கொண்டிருந்தார்.

    Rajini makes Japanese to speak Tamil

    அவர் பெயர் யஷுதா.. அவரிடம் தொலைக்காட்சி நிருபர் உங்களுக்கு இந்தியாவில் யாரைப் பிடிக்கும் என்றார். உடனே அவர் ரஜினியும் பிரதமர் மோடியும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காட்டி, 'எனக்கு ரஜினியை மிகவும் பிடிக்கும். ரஜினியும் மோடியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் இவர்களை எனக்குப் பிடிக்கும்,' என்றார்.

    உங்களுக்கு ரஜினியை ரொம்பப் பிடிக்குமா? என்றார் நிருபர். அதற்கு அவர், 'நான் ரஜினியின் ரசிகன். ரசிகர் மன்றத்தில் இருக்கிறேன்' என்று கூறி, ரஜினி ஃபேன் க்ளப் ஜப்பான், என்ற அட்டையைக் காட்டிச் சிரித்தார்.

    ஓ.. நீங்க ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவரா.. சரி, உள்ளூர் மொழியில் ரஜினியை எப்படி அழைப்பார்கள் தெரியுமா?

    'தமிழில்தானே... எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்... தலைவர்!'- என்கிறார் அதே சிரிப்புடன்.

    'நான் அவரை மிகவும் விரும்புகிறேன். முத்து, பாட்ஷா படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. தலைவர் ரஜினி கிரேட்" என்ற யஷூதாவிடம், பாட்ஷா படத்திலிருந்து ஒரு வசனம் பேசும்படி நிருபர் கேட்டார்.

    உடனே, "இந்த பாட்ஷா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி" என்று பேசிக் காட்டினார் யஷுதா.

    இந்த வீடியோதான் இப்போது சமூக வலைத் தளங்களில் மிகப் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இந்த யஷுதா மட்டுமல்ல... இவரைப் போல பல ஜப்பானிய இளைஞர்கள் தமிழைக் 'கொஞ்சம் கொஞ்சம்' பேசுகிறார்கள். பெரும்பாலும் ரஜினி பட வசனங்களாகத்தான் அவை இருக்கும்.

    வெளிநாடுகளில்.. அதுவும் நமது கலாச்சாரத்துக்கு சம்பந்தமே இல்லாத அயல் மனிதர்களையும் தமிழ் கற்க வைத்திருக்கிறார் ரஜினி என்பதே!

    ஏற்கெனவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானுக்கு சென்றிருந்தபோது அந்த நாட்டு பாராளுமன்றத்தில், ரஜினியின் முத்து படத்தைக் குறிப்பிட்டு, இரு நாடுகளும் கலாச்சார, பண்பாட்டு ரீதியாக இணக்கமானவை எனக் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

    ரஜினி பற்றி ஒரு ஜப்பான் ரசிகரின் பேட்டி - வீடியோ

    English summary
    A popular news channel was covering the journey of PM Narendra Modi’s visit to Japan, and happened to see a Rajini fan and interviewed him for a few minutes. The video is going viral over the internet for the last couple of days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X