»   »  தெறி ட்ரைலர்... ரஜினி பாராட்டு!

தெறி ட்ரைலர்... ரஜினி பாராட்டு!

Posted by:
Subscribe to Oneindia Tamil

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தின் முன்னோட்டக் காட்சியைப் (ட்ரைலர்) பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இப்போது ரஜினி நடித்து வரும் கபாலி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தைத் தயாரிக்கும் தாணுதான், தெறி படத்தையும் தயாரித்துள்ளார்.


Rajini praises Theri trailer

சமீபத்தில்தான் தெறி படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலருக்கு இணையத்தில் விஜய் ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.


நேரம் கிடைக்கும் போது இளம் நடிகர்களின் புதிய படங்கள் மற்றும் டிரைலர்களையும் பார்த்துப் பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி.


சமீபத்தில் விஜய்யின் ‘தெறி'பட டிரைலர் ரஜினி பார்த்தார். அதை மிகவும் ரசித்த ரஜினி உடனே விஜய், தெறி பட இயக்குநர் அட்லி ஆகியோரை போனில் வாழ்த்தினார்.


ரஜினியின் பாராட்டு விஜய்யை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தெறி முன்னோட்டக் காட்சி மற்றும் பாடல்கள் வெளியீட்டுக்கு முன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார் இயக்குநர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Rajinikanth has praised Vijay and director Atlee for Theri Trailer.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos