»   »  ‘எப்பவுமே இப்டித் தான் திருட்டு முழி முழிப்பீங்களா...?’ கருணாகரனைக் கலாய்த்த ரஜினி!

‘எப்பவுமே இப்டித் தான் திருட்டு முழி முழிப்பீங்களா...?’ கருணாகரனைக் கலாய்த்த ரஜினி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகராக் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் கருணாகரன்.

சுந்தர்.சி.யின் கலகலப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கருணாகரன். இவர் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

திருச்சியைச் சேர்ந்த கருணாகரன், பொறியியல் பட்டதாரி. ஆரம்பத்தில் அலுவலக வேலை பார்த்தவாறே குறும்படங்களில் நடித்து வந்த கருணாகரன், தற்போது முழுநேர நடிகராகி விட்டார்.

இந்நிலையில் தி இந்துவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தனது கடந்த காலங்களைப் பற்றி மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நண்பன் பட வாய்ப்பு...

ஒரு குறும்படத்தில் என்னுடைய நடிப்பைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் சார் பரிசு கொடுத்தார். அப்போதே அவர் என்னை ‘நண்பன்' படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அப்போது என்னால் நடிக்க முடியவில்லை.

கலகலப்பு...

சுந்தர்.சி. சார் ‘கலகலப்பு' படத்தில் நடிக்க என்னை அழைத்தார். வேலையில் இருப்பதால் நடிக்க முடியாதே என்றேன். அதற்கு அவர் கால்ஷீட்டில் அதைச் சரி செய்து கொள்ளலாம் என்று கூறி நடிக்க வைத்தார்.

20 படங்களுக்கும் மேல்...

அந்தப் படத்துக்கு பிறகு ‘பீட்சா', ‘சூது கவ்வும்', ‘யாமிருக்க பயமே', ‘கப்பல்', ‘ஜிகர்தண்டா' ஆகிய படங்களில் நடித்தேன். இதில் ‘சூது கவ்வும்' படத்தின் வெற்றியும் "காசு பணம் துட்டு" பாடலும் என்னை திரையுலகில் பிரபலமாக்கியது. இதைத் தொடர்ந்து மென்பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, முழுசாக சினிமாவில் இறங்கி விட்டேன். இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.

திருட்டு முழி...

ரஜினி சாருடன் ‘லிங்கா'வில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பின்போது அவர் எல்லோரையும் கலாய்ப்பார். ‘நீங்க எப்போதும் இப்படித்தான் திருட்டு முழியுடன் இருப்பீங்களா'னு என்னையும் கலாய்த்தார். என்னுடன் இயல்பாக பழகு, பயப்பட வேண்டாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார்.

லிங்கா பட அனுபவம்...

அவருடன் நடித்த 20 நாட்களும் போனதே தெரியவில்லை. நாம் பேசுவதை அப்படியே பேசிக் காட்டுவார். "படப்பிடிப்பின்போது ஏதாவது புது யோசனை தோன்றினால் உடனே சொல்லுங்க. அதைப் படத்தில் வைத்துக்கொள்ளலாம்" என்று உற்சாகப்படுத்துவார். அந்த மனது எந்த நாயகனுக்கு வரும்?' எனத் தெரிவித்துள்ளார்.

எமியைக் காப்பாற்றிய கருணாகரன்...

மேலும், படப்பிடிப்பின் போது எமி ஜாக்சனை விபத்தில் இருந்து காப்பாற்றியது தொடர்பாகவும் இப்பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அதாவது மலைப்பகுதி ஒன்றில் நடந்த படப்பிடிப்பில் எமி லூனா வண்டி ஓட்டும் காட்சியில், பள்ளம் ஒன்றில் தவறி விழப் பார்த்தாராம் எமி. விரைந்து சென்று கருணாகரன் தான் அவரது உயிரைக் காப்பாற்றினாராம்.

நன்றி... நன்றி... நன்றி...

தன் உயிரைக் காப்பாற்றிய கருணாகரனுக்கு தனக்கே உரித்தான ஸ்டைலில் நன்றி சொன்னாராம் எமி. இந்தக் காட்சியை நேரில் பார்த்த அப்படத்தின் நாயகனான உதயநிதி விழுந்து விழுந்து சிரித்தாராம். இந்த சம்பவத்தைத் தான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எமி பதிவு செய்துள்ளார். அதில் மீண்டும் தனது உயிரைக் காப்பாற்றிய கருணாகரனுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

முதலில் பயம்... இப்போ ஹேப்பி....

முதலில் கருணாகரன் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்றதும், அவரது வீட்டார் மிகவும் பயந்தார்களாம். ஆனால், தொடர்ந்து அவருக்கு நல்ல விதமான கதாபாத்திரங்கள் அமைந்து அவர் பிரபலமாகி விட்டார். இதனால், கருணாகரன் நடிகரானதில் அவரது அப்பாவிற்கு ரொம்பவே சந்தோஷமாம்.

English summary
Actor karuankaran has said that super star Rajinikandh teased him, while participating in the Lingaa movie shooting.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos