»   »  ரஜினி மிக அருமையாக திரைக்கதை எழுதுவார், சிறந்த இயக்குநர்!- இளையராஜா

ரஜினி மிக அருமையாக திரைக்கதை எழுதுவார், சிறந்த இயக்குநர்!- இளையராஜா

Posted by:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் மிக அருமையாக திரைக்கதை எழுதுபவர்.. சிறந்த இயக்குநரும் கூட.. என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

மீடியாவில் அதிகம் பேசுவதைத் தவிர்க்கும் இளையராஜா, பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், அமிதாப், ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

அமிதாப்புடன்...

அமிதாப் குறித்து இளையராஜா கூறுகையில், "அமிதாப் மிகச் சிறந்த கலைஞர். நம்ப முடியாத அளவுக்கு திறமைசாலி. அருமையான மனிதர். அவர் நல்ல பாடகரும் கூட. அவருக்காக நான் பாடல் உருவாக்கும் முன்பே, அவர் பாடியதைக் கேட்டிருக்கிறேன்.

ஸ்ருதி உணர்ந்து..

மிகச் சிறப்பாக, தன் ஸ்ருதியில் சரியாகப் பாடுபவர் அமிதாப். அதை மனதில் வைத்துதான் ஷமிதாப்பில் பிட்லி.. பாடலை உருவாக்கிறேன். அவரும் அவரும் அருமையாகப் பாடினார்.

கமல் ஹாஸன்...

கமல் ஹாஸன் மிகச் சிறந்த பாடகர். அருமையான குரல் வளம் கொண்டவர். ஒரு காட்சியாகட்டும், இசையாகட்டும், அதை உள்வாங்கிக் கொள்ளும் அவர் திறன் அபாரமானது. செட்டில் இயக்குநர் காட்சிகள் அமைத்துக் கொண்டிருக்கும்போது, இவர் ஜோக்கடித்துக் கொண்டிருப்பார். ஆனால் தன் ஷாட் வந்ததும் இயக்குநர் எதிர்ப்பார்த்ததை பூர்த்தி செய்துவிடுவார். அது நம்ப முடியாத அளவுக்கு வியப்பாக இருக்கும்.

ரஜினிகாந்த்

ரஜினியைப் பொருத்தவரை, அவருக்குள் மிகச் சிறந்த இயக்குநர் இருக்கிறார். மிகச் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் அவர். இரண்டிலுமே மிகத் தேர்ந்தவர் ரஜினி. ஆனால் அவரது சினிமா கேரியர் வேறு. ஒரு முறை அவரிடம் , "உங்களுக்கான திரைக்கதையை ஏன் நீங்களே எழுதக் கூடாது?" என்று கேட்டேன். உடனே அவர், 'அது வேற, இது வேற சாமி..' என்றார்.

English summary
Maestro Ilaiyaraaja revealed that Rajinikanth is a wonderful script writer and director.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos