»   »  கபாலியில் இரட்டை வேடங்களில் ரஜினி... இரண்டாவது கெட்டப் வெளியானது!

கபாலியில் இரட்டை வேடங்களில் ரஜினி... இரண்டாவது கெட்டப் வெளியானது!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கபாலி' படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லிங்காவுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘கபாலி.' இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.


இன்று பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத ரஜினி, கோவாவில் கபாலி படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.


மலேசிய டான்

இந்தப் படத்தில் ரஜினி மலேசிய டானாக வருகிறார். இது தொடர்பான காட்சிகள் சென்னையிலும் மலேசியா மற்றும் தாய்லாந்திலும் படமாக்கப்பட்டன.


வயதான கெட்டப்

இந்த மலேசிய டான் வெள்ளைத் தாடி, சால்ட் அன்ட் பெப்பர் தலைமுடியுடன் காட்சி தந்தார். மலேசியாவில் இந்த தோற்றத்தில் அவர் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல இணையதளங்களில் பரபரப்பாக வலம் வந்தன.


அடுத்த கெட்டப்

இந்த நிலையில் ரஜினிகாந்த் தாடி இல்லாமல் கண்ணாடி அணிந்து இளமை தோற்றத்தில் இருப்பது போன்ற இன்னொரு படமும் வாட்ஸ்-அப் மற்றும் இணையதளங்களில் நேற்று வெளிவந்தது. கோவாவில் நடந்த படப்பிடிப்பில் இந்த படத்தை எடுத்துள்ளனர். இதன்மூலம் ‘கபாலி' படத்தில் ரஜினிகாந்த் 2 தோற்றங்களில் நடிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 


 


ராதிகா ஆப்தே

வயது குறைந்த தோற்றத்தில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். கிஷோர், கலையரசன், தன்ஷிகா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். பா.ரஞ்சித் இயக்கி வரும் இந்தப் படம் வரும் தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகிறது.


English summary
In Kabali, Rajinikanth is playing dual roles and his second character look has leaked online today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos