twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா டிஜிட்டலில் வெளியாகிறது!

    By Shankar
    |

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில காவிய படைப்புகளுக்கு இருக்கும் வரவேற்பும், அங்கீகாரமும் குறையவே குறையாது. அதிலும் திரையுலகில், காலத்தால் அழியாத, நட்சத்திர கதநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றுமே சிறப்பு தான். அப்படி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா'.

    எத்தனையோ தடவைகள் பாட்ஷா படத்தை ரசிகர்கள் கண்டிருந்தாலும், இன்றும் அந்த திரைப்படம் சம்பந்தமான வசனங்களையோ, பாடலையோ தொலைக்காட்சியில் எதார்த்தமாகப் பார்த்து விட்டால், அவர்கள் தங்களை அறியாமலையே அதீத உற்சாகம் அடைகிறார்கள். அது தான் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான பாட்ஷா படத்தின் சிறப்பு.

    Rajinikanth's Baasha releasing in digital with 5.1 sound

    தலைவர் ரஜினிகாந்தின் அசாத்திய நடிப்பு, ஸ்டைல், ஆக்ஷன், விறு விறுவென நகரும் திரைக்கதை, எவராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலம் சென்ற ரகுவரனின் நடிப்பு, நாடி நரம்புகளுக்குள் புகும் தேவாவின் இசை மற்றும் வியக்க வைக்கும் அதிரடி காட்சிகள் ஆகியவைதான் பாட்ஷா படத்தின் ஸ்பெஷல்.

    Rajinikanth's Baasha releasing in digital with 5.1 sound

    தயாரிப்புத் துறையில் வெற்றிகரமாக தங்களின் ஐம்பதாவது வருடத்தை நிறைவு செய்திருக்கும் 'சத்யா மூவீஸ்', அதனை சிறப்பிக்கும் விதமாக தற்போது பாட்ஷா படத்தை, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, 5.1 டிஜிட்டல் ஒலி அமைப்பில் வெளியிட இருக்கிறது. இந்த நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறிய பாட்ஷா படத்தின் டிரைலர், கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் பார்வையாளர்கள், இந்த டிரைலரை 'யுடியூப்பில்' கண்டுள்ளார்கள்.

    "எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு அதிகமான வரவேற்பை நாங்கள் பெற்றுள்ளோம். நான்கு மூலைகளில் இருந்தும் எங்களுக்கு கிடைக்கும் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்கும் பொழுது, அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் #EpicBaasha என்ற ட்ரெண்டிங் மொழியோடு, முன்னிலை வகிக்க ஆரம்பித்து விட்டது. அலைக்கடலென திரளும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பை எந்த டிரைலர் மூலம் நாங்கள் பெற்று இருக்கிறோம். ஜப்பான் நாட்டு ரசிகர்கள் எப்போதுமே தலைவர் ரஜினிகாந்தின் திரைப்படங்களை திருவிழா போல் கொண்டாடுவார்கள்....அந்த வகையில் அவர்கள் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. அவர்கள் ஏற்கனவே சென்னையில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட பிரத்யேக காட்சிக்கு வர முடிவு செய்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கவும் இருக்கிறார்கள். டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் 'பாட்ஷா' படத்தை ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறது 'ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான்' நிறுவனம். தற்போது படத்தின் வசனங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் (SUBTITLE) பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் இன்னும் சில நாடுகளில் இருந்தும் எங்களின் டிஜிட்டல் பாஷாவிற்கு வர்த்தக ரீதியாக நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது...." என்று சத்யா மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    விநியோகம் முழுவதுமாக முடிந்த பின், வருகின்ற 2017 - ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

    English summary
    Sathya Movies is all set for releasing Digitally Re-mastered Superstar Rajinikanth's blockbuster movie Baasha on January 2017
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X