Don't Miss!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
2017-ல் வெளியாகிறது ரஜினியின் எந்திரன்!
ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கம்பீரமாக வெளிவரவிருக்கிறது.
இந்த நிலையில் எந்திரன் 2 படத்துக்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. கபாலி வெளியான கையோடு, எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
டிசம்பர் வரை கபாலி படப்பிடிப்பு நடப்பதால், 2016-ம் ஆண்டு ஜனவரியில் எந்திரன் 2 தொடங்குகிறது.
எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அர்னால்ட் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. நாயகிகளில் ஒருவர் எமி ஜாக்ஸன். மேலும் ஒரு பிரபல நடிகையும் படத்தில் உண்டு.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 3டி மற்றும் 2டியில் படம் உருவாகிறது.
2016-ம் ஆண்டு தொடங்கும் எந்திரன் 2 படப்பிடிப்பு வரும் 2017-ல் முடிவடைகிறது. அந்தாண்டு இறுதிக்குள் அல்லது அதற்கடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் எந்திரன் 2ஐ வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.