»   »  மீடியா விமர்சகர்களுக்காக ரஜினி சொன்ன ராஜா கதை!

மீடியா விமர்சகர்களுக்காக ரஜினி சொன்ன ராஜா கதை!

Posted by:
Subscribe to Oneindia Tamil

தான் தோன்றும் மேடைகளில் சுவாரஸ்யமான குட்டிக கதைகள் சொல்வது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வழக்கம்.

இன்று நெருப்புடா இசை வெளியீட்டு விழாவில் மீடியா விமர்சனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி சொன்ன குட்டிக் கதை இது.

Rajinikanth's short story for media people

ஒரு ராஜா இருந்தானாம்

அந்த ராஜாவுக்கு புள்ளையே பொறக்கல.. அவனும் போகாத கோயில் கிடையாது.. பண்ணாத பூஜை கிடையாது. என்னென்னமோ செய்யறான். கேட்காத கடவுளே கிடையாது. ரொம்ப வருஷம் கழிச்சி ஒரு குழந்தை பொறந்தது. ஆண் குழந்தை. ரொம்ப சந்தோஷமாயிட்டான்.

அடுத்து நாட்ல இருந்த அத்தனை ஜோசியக்காரர்கள், ரிஷிகளையெல்லாம் கூப்பிட்டான். பையனுக்க ஜாதகம் பாருங்கன்னு கேக்கறான்.

எல்லாருமே 'ராஜா உங்களுக்கு இவனாலதான் மரணம்.. இவன்தான் உங்களை சாகடிக்கப் போறான்'னு சொல்றாங்க. உடனே கோபம் வந்த ராஜா 'எல்லாரையும் உள்ள தூக்கிப் போடுங்கய்யா... பத்து நாள்ள தலைய சீவிடுங்க'ன்னு சொல்லிடறான்.

இன்னொரு ஜோசிக்காரர் வந்தார். பெரிய ஜோசியக்காரர். எல்லாம் அறிந்தவர். அவர் கிட்ட குழந்தையின் ஜாதகத்தைக் காட்டி எதிர்காலம் பத்திக் கேட்டான் ராஜா... "ஆஹா... இந்த மாதிரி ஒரு ஜாதகத்தை நான் பாத்ததில்லை. இவன் உன்னை விட பெரிய ராஜாவா, நூறு மடங்கு பலமிக்க ராஜாவா வருவான்"னு சொல்றார் ஜோசியக்காரர்.

உடனே ரொம்ப சந்தோஷமான ராஜா, உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க... என்ன வேணும்னாலும் தரேன்னு சொல்றார்.

உடனே, "இப்ப அடைச்சி வச்சிருக்கிற ஜோசியக்காரங்களை விடுதலை பண்ணு,"ன்னு கேக்கறார்.

அந்த மாதிரி, விமர்சனங்களுக்கு நாம பயன்படுத்தற வார்த்தை முக்கியம். நாசூக்கா சொல்லுங்க. ஒரே விஷயம்தான். ஆனா சொல்ற விதத்துலதான் எல்லாம் இருக்கு. அதைவிட்டுட்டு நேரடியா, 'ஏன்டா இந்த மாதிரி படம் எடுத்த, ஏன்டா சாவடிக்கிறன்னெல்லாம் சொல்லாதீங்க,' என்றார் தனக்கே உரிய சிரிப்புடன்.

English summary
Superstar Rajinikanth's short story for media critics who are blasting movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos