» 

இந்த வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... ராஜூ முருகனின் குக்கூ!

Posted by:
 

இந்த வெள்ளிக்கிழமை ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ், இந்தி, ஆங்கிலம் என கலந்து கட்டி 12 படங்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் மீடியா, எழுத்தாளர்கள், சமூக வலைத்தள பாவனையாளர்களின் வாய்மொழி விளம்பரம் காரணமாக ராஜூ முருகனின் குக்கூவுக்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.

பார்வையற்றவர்கள் காதல்

பார்வையற்ற நாயகன், நாயகியின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இந்த குக்கூ. ராஜு முருகனுக்கு இது முதல் படம். பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு. சென்னை மற்றும் புறநகர்களில் பெரிய அளவில் வெளியிடுகிறார்கள்.

 

 

யாசகன்

அங்காடித் தெரு மகேஷ் - நிரஞ்சனா நடித்துள்ள படம் இந்த யாசகன். துரைவாணன் என்பவர் இயக்கியுள்ளார்.

கேரள நாட்டிளம் பெண்களுடனே..

அபி சரவணன் நாயகனாக நடித்துள்ள முதல் படம் கேரள நாட்டிள பெண்களுடனே. இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் இசையமைத்து இயக்கியுள்ளார். இவற்றைத் தவிர, பனிவிழும் நிலவு, விரட்டு ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

ஆங்கிலம்

ஹாலிவுட் படமான இங்கிலீஷ் சினிஸ்டர், தமிழில் டப்பாகி வருகிறது. ஆங்கன் தேகி, ராகினி எம்எம்எஸ், லக்ஷ்மி ஆகிய இந்திப் படங்களும் இன்று வெளியாகின்றன. இவற்றில் ராகினி எம்எம்எஸ் சன்னி லியோன் நடித்தது. மம்முட்டியின் பிரைஸ் தி லார்ட் படமும் இன்று வெளியாகியுள்ளது.

Read more about: cuckoo, குக்கூ, வெள்ளிக்கிழமை, படங்கள்
English summary
Another big week with nearly a dozen releases in various languages. The big Tamil release is the off–beat Cuckoo, directed by Raju Murugan.

Tamil Photos

Go to : More Photos