»   »  இரும்பு மனுஷி 'அம்மா'வாக ஆசைப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன்

இரும்பு மனுஷி 'அம்மா'வாக ஆசைப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். இந்நிலையில் அம்மாவின் வாழ்க்கை வரலாறு படமானால் எப்படி இருக்கும் என ரம்யா கிருஷ்ணனின் புகைப்படத்துடன் ஒரு போஸ்டர் வாட்ஸ் ஆப்பில் பரவியுள்ளது.

அதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் கூறுகையில்,

கனவு கதாபாத்திரம்

என் கனவு கதாபாத்திரம் எது என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் பல முறை கேட்டுள்ளனர். அப்போது என்னிடம் பதில் இல்லை. தற்போது உள்ளது. புரட்சித் தலைவி ஜெயலலிதாவாக நடிப்பதே என் கனவு கதாபாத்திரம்.

ஜெயலலிதா

ஜெயலலிதாவாக நடிப்பது சவாலானது தான் என்றாலும் நல்ல கதையுடன் இயக்குனர் யாராவது அணுகினால் நிச்சயம் நடிப்பேன். அம்மா துணிச்சலான, அறிவான பெண்.

அம்மா

அம்மா என்னை போன்று லட்சக்கணக்கான பெண்களின் முன்மாதிரி. அப்பேர்பட்டவரை போன்று நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு கிடைக்கும் கவுரவம் என்றார் ரம்யா கிருஷ்ணன்.

நீலாம்பரி

படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டாரையே வந்து பார் என்ற அளவுக்கு வில்லாதி வில்லியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். அப்படிப்பட்டவர் இரும்பு மனுஷியான ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று பலரும் கூறுகிறார்கள்.

English summary
Ramya Krishnan ready to portray Amma on screen Actress Ramya Krishnan is ready to act as iron lady Jayalalithaa in her biopic.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos