twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேய் சீசன் முடியப்போகுது... இனி பாம்பு சீசன் ஆரம்பம்: மிரட்ட வரும் ரம்யா

    By Mayura Akilan
    |

    சென்னை: பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பேய்கள் ஆட்டி வைத்தன. இப்போது ட்ரெண்ட் பாம்பு பக்கம் திரும்பியுள்ளது. அம்மன் என்ற சாமி படத்தையும் அருந்ததி என்ற பேய் படத்தையும் எடுத்த கோடி ராமகிருஷ்ணா இயக்கிய படம் சிவநாகம் இனி தியேட்டர்களில் படமெடுத்து ஆடப்போகிறது.

    ‘பாரத் பந்த்', ‘அம்மன்', ‘அருந்ததி' உட்பட தமிழிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. இப்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 137வது படம், நாகராகுவு. கன்னடத்தில் வெளியான இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியிலும் வெளியிடுகிறார்கள்.

    நான் ஈ, பாகுபலி, காஞ்சனா' ஆகிய வெற்றிப் படங்களின் வரிசையில் வர உள்ள படம்தான் சிவநாகம். இந்த படத்தில் ரம்யா, டிகந்த், ராகேஷ், விவேக் உபாத்யா, முகுல் தேவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    120 அடிநீள நாகம்

    120 அடிநீள நாகம்

    இப்படத்திற்காக 120 அடி நீளத்தில் கிராபிக்ஸ் பாம்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். 7 நாடுகளைச் சேர்ந்த 576 விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்கள் 730 நாட்கள் பணிபுரிந்து இப்படத்திற்கான மொத்த கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

    கிராபிக்ஸ் காட்சிகள்

    கிராபிக்ஸ் காட்சிகள்

    ‘பாகுபலி, நான் ஈ' ஆகிய வெற்றிப் படங்களுக்கு விஎப்எக்ஸ் காட்சிகளை இயல்பாக அமைத்து அனைவரது பாராட்டைப் பெற்ற மகுட்டா நிறுவனம்தான் அந்த பொறுப்பை ஏற்றுள்ளது.

    விஷ்ணுவர்த்தன்

    விஷ்ணுவர்த்தன்

    மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தனை கிராஃபிக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகள் மூலம் இப்படத்தில் உருவாக்கியுள்ளனர்.கற்பனையைம் மிஞ்சும் விதத்தில் இதுவரை பார்த்திருக்காத பிரம்மாண்டமான சிவபெருமான் இப்படத்தில் வருகிறார்.

    பூர்வ ஜென்ம கதை

    பூர்வ ஜென்ம கதை

    அரசியல்வாதியும் மாஜி எம்.பியுமான ரம்யா இப்படத்தில் நடித்துள்ளார். முற்பிறவியில் ஆதிவாசிப் பெண்ணாக இருப்பார். இப்பிறவியில் நடனப் பெண்மணியாக வருவார். இது ஒரு பூர்வ ஜென்மக் கதை.

    கடத்தல் மீட்பு

    கடத்தல் மீட்பு

    கடந்த பிறவியில் விரோதிகளால் பறிக்கப்பட்ட கலசம் ஒன்றை, இப்பிறவியில் போராடி மீட்டெடுப்பதுதான் கதை. நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்றால், அந்தக் கலசத்தின் சக்தி இருந்தால்தான் முடியும். அதை விரோதிகள் நயவஞ்சகமாகக் கைப்பற்றுகிறார்கள். பிறகு எப்படி அந்தக் கலசம் உரியவர்களிடம் வந்து சேர்கிறது என்பது, கிளைமாக்ஸ்.

    மூன்று வருட உழைப்பு

    மூன்று வருட உழைப்பு

    இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவின் மூன்று வருட உழைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கான டீசர் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

    ஜூலையில் ரிலீஸ்

    ஜூலையில் ரிலீஸ்

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனம் இப்படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி தமிழில் வெளியிட உள்ளது. ஜுலை மாதம் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போ இனி பாம்பு சீசன்தான்.

    English summary
    Divya Spandana aka Ramya is an established actress of South India. She hasn’t been active in films after her entry into politics. After a noticeable gap, Ramya is coming back as Naga Kanni in ’Nagarahuvu’. It will be released in Telugu, Tamil and Kannada languages. It will be titled as ‘Siva Nagam’ in Tamil and it will be a dubbed version.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X