»   »  'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் பேத்தியை அறிமுகம் செய்யும் மிஷ்கின்!

'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் பேத்தியை அறிமுகம் செய்யும் மிஷ்கின்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை:பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இயக்குநர் மிஷ்கின் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார்.

'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கியவர் ரவிச்சந்திரன். இவரது பேத்தி தான்யா தற்போது மாடலிங் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான்யாவை ஒரு புகைப்படத்தில் பார்த்த மிஷ்கின் தன்னுடைய அடுத்த படத்தில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

மிஷ்கின் நடித்து வரும் சவரக்கத்தி படத்திற்குப் பின் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்குகிறார். இந்த 2 படங்களுக்குப் பின் தான்யா நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார்.

நாயகன், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகின்றனர்.

ஆக்ஷனை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாத்தா போல பேத்தியும் தமிழ் சினிமாவில் தடம் பதிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Veteran Actor Ravichandran's Grand daughter Tanya makes her debut in Myshkin's Next movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos