» 

எல்லாம் நல்லா போனா இந்த ஆண்டே விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ரிலீஸ்: கமல்

Posted by:

பெங்களூர்: விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் 2013ல் ரிலீஸாகும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படம் கடந்த 25ம் தேதி தமிழகத்தில் வெளியாக இருந்தது. ஆனால் அப்படத்தில் முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளது என்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த தமிழக அரசோ படத்திற்கு தடை விதித்தது. இதையடுத்து கோர்ட், கேஸ் என்று சென்று இறுதியில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்பட்டு படம் கடந்த 7ம் தேதி ரிலீஸானது.

இந்நிலையில் பெங்களூர் சென்ற கமல் ஹாசன் அங்கு தனது நண்பரும், கன்னட நடிகருமான அம்பரீஷை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் எப்பொழுது ரிலீஸாகும் என்று கூறினார்.

இந்திய மக்கள், ஊடகங்களின் ஆதரவை என்றும் மறவேன்

விஸ்வரூபம் பிரச்சனையின்போது இந்திய மக்களும், ஊடகங்களும் அளித்த ஆதரவை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். இந்திய மக்களின் அன்புக்கும், பாசத்திற்கும் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவனாக உள்ளேன் என்றார் கமல்.

விஸ்வரூபம் சர்ச்சை எப்படி தொடங்கியது?

விஸ்வரூபம் சர்ச்சை எப்படி தொடங்கியது என்றே தெரியவில்லை. குறிப்பிட்ட தேதியில் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியாததால் ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டதை தமிழக மக்கள் ஈடுகட்டியுள்ளனர்.

See next photo feature article

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் எப்பொழுது ரிலீஸ்?

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாக பணிகள் துவங்கிவிட்டன. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் படம் இந்த ஆண்டே ரிலீஸாகும். இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்பு கிளம்பாது என்று நம்புகிறேன். இந்த படத்தை முடித்துவிட்டு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன் என்று கமல் தெரிவித்தார்.

Read more about: vishwaroopam, விஸ்வரூபம், கமல், ரிலீஸ், moo
English summary
Kamal Hassan told that if everything goes well, he will release the second part of Vishwaroopam this year itself.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos