twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வருமானம் போனாலும் பரவாயில்லை: துணிந்து முடிவு எடுத்த 'ரெமோ' தயாரிப்பாளர்

    By Siva
    |

    சென்னை: வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை என வெளிநாடுகளில் நடக்கும் பிரீமியர் ஷோக்களை ரத்து செய்துள்ளார் ரெமோ படத்தின் தயாரிப்பாளர்.

    [Read This: காதல், பெட்ரூம் வாசகம்: வைரலான ஐஸ்வர்யா ராயின் ரகசியங்கள்]

    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ரெமோ படம் வரும் அக்டோபர் 7ம் தேதி ரிலீஸாகிறது. படத்தை பார்த்த சொன்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

    படத்தை விளம்பரப்படுத்த தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் மன்மதன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    பிரீமியர்

    பிரீமியர்

    படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் வெளிநாடுகளில் பிரீமியர் ஷோ மூலம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல தொகை கிடைத்து வருகிறது. அந்த பிரீமியர் காட்சியால் வருமானம் வந்தாலும் தொல்லையும் சேர்ந்து வருகிறது.

    திருட்டு டிவிடி

    திருட்டு டிவிடி

    பெரும்பாடு பட்டு படத்தை எடுத்து ரிலீஸ் செய்தால் அன்றே திருட்டு டிவிடி வந்துவிடுகிறது. வெளிநாடுகளில் நடக்கும் பிரீமியர் ஷோக்கள் மூலம் தான் திருட்டு டிவிடி தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ரெமோ

    ரெமோ

    வருமானம் போனாலும் பரவாயில்லை வெளிநாடுகளில் ரெமோ பிரீமியர் காட்சிகள் இருக்காது என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெமோ திருட்டு டிவிடியில் வெளியாவதை தடுக்க இந்த முடிவு.

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அக்டோபர் 7ம் தேதி காலையில் தமிழகத்தில் திரையிடப்படுவது தான் ரெமோ படத்தின் முதல் காட்சியாக இருக்கும். ரெமோ தயாரிப்பாளர் எடுத்துள்ள துணிச்சலான முடிவு பலன் அளித்தால் அதை பின்பற்ற பிற தயாரிப்பாளர்களும் முயற்சி செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Remo producer has taken a bold decision ahead of Sivakarthikeyan starrer's release on october 7th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X