»   »  அப்பாவைக் கடத்திய வீரப்பனை பழிவாங்க ஷிவ்ராஜ் குமாருக்கு திரையில் ஒரு வாய்ப்பு...: ராம்கோபால் வர்மா

அப்பாவைக் கடத்திய வீரப்பனை பழிவாங்க ஷிவ்ராஜ் குமாருக்கு திரையில் ஒரு வாய்ப்பு...: ராம்கோபால் வர்மா

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சந்தன மர வீரப்பன் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக திரைப்படம் எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி என நான்கு மொழியில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்கு "கில்லிங் வீரப்பன்" (Killing Veerappan) என அவர் பெயர் வைத்துள்ளார்.

ஏற்கனவே, மும்பை தாதா உலகம், மும்பை தாக்குதல் சம்பவம் என பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுத்தவர் ராம் கோபால் வர்மா. இவர் தற்போது, சந்தனக் கடத்தல் விவகாரத்தில் வீரப்பன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பான கதைக்களத்தில் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இப்படத்தில் நாயகனக கன்னட நடிகர் ஷிவ்ராஜ் குமார் நடிக்கிறார். வீரப்பன் பாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

தனது புதிய படம் குறித்து ராம் கோபால் வர்மா கூறியிருப்பதாவது :-

சரியான திரைக்கதை...

வீரப்பனின் கதை எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதைப் பற்றிய படத்தை இயக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். இப்போதுதான் அதற்கான சரியான திரைக்கதை கிடைத்துள்ளது.

 

 

வீரப்பனைப் பழி வாங்க வாய்ப்பு...

இந்தப் படம் வீரப்பனின் தனிப்பட்ட கதையை காட்டாது. மாறாக வீரப்பனை கொலை செய்தவரைப் பற்றிய படமாக இருக்கும். ஷிவ்ராஜ்குமாரை இதில் நடிக்க வைக்க ஒரு காரணம் உள்ளது. வீரப்பன் ஷிவ்ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாரை கடத்திச் சென்றார். தற்போது ஷிவ்ராஜ்குமாருக்கு வீரப்பனை பழிவாங்க திரையில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

வீரப்பனைக் கொன்றவர்...

தமிழக, கேரள, கர்நாடக மாநில அரசாங்கங்கள் பல கோடி ரூபாயை செலவழித்து வீரப்பனை பிடிக்க திட்டமிட்டனர். 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் தேடுதல் வேட்டையில் இருந்தனர். கடைசியில் ஒருவரால் மட்டுமே வீரப்பனை கொல்ல முடிந்தது. அந்த ஒருவரைப் பற்றிய படமாகவே இது இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

ஒசாமாவை விட பயங்கரம்...

மேலும், வீரப்பனை ஒசாமா பின் லேடனை விட அபாயகரமான ஆள் என கூறும் ராம் கோபால் வர்மா, ‘வீரப்பனை விட அபாயகரமான ஆளை என்னால் பார்க்கமுடியவில்லை. ஒசாமா பின் லேடனை விட சூழ்ச்சியான, இரக்கமில்லாத ஆளாகவே வீரப்பன் எனக்குத் தெரிகிறார். ஒசாமாவுக்கு சர்வதேச அளவில் தொடர்புகள் இருந்திருக்கலாம் ஆனால் அவர் வீரப்பனை விட அபாயகரமானவர் அல்ல" என்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு...

தற்போது இப்படத்தின் திரைக்கதையை எழுதும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் ராம் கோபால் வர்மா. ஷிவ்ராஜ் குமார் தனது மற்ற பட வேலைகளை முடித்து வந்ததும், இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க ராம்கோபால் வர்மா திட்டமிட்டுள்ளார். அதன்படி, இந்த மாத இறுதியில் படத்தை துவக்குகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாயகி ரகசியம்...

இப்படத்திற்காக வீரப்பனைப் பற்றிய அனைத்து விதமான ஆவணங்களையும் ராம்கோபால் வர்மா ஆராய்ச்சி செய்துள்ளாராம். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை புதிய கோணத்தில் இந்தப் படத்தில் காட்டப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படத்தின் நாயகி குறித்து கேட்டபோது, அது ரகசியமான விஷயம் என்றும், ரசிகர்களை தான் ஆச்சரியப்படுத்தப் போவதாகவும் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.

 

 

ஆந்திர என்கவுண்டர்...

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்ற விவகாரம் பரபரப்பாக உள்ள நிலையில், வீரப்பன் கதையை ராம்கோபால் வர்மா படமாக்கப் போவதாக அறிவித்துள்ளது கவனிக்கத் தக்கது.

வனயுத்தம்...

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மற்றும் கன்னடத்தில் வீரப்பன் குறித்து வனயுத்தம் என்ற தலைப்பில் படம் எடுக்கப் பட்டது. இப்படத்தில் வீரப்பன் வேடத்தில் கிஷோரும், போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும் நடித்திருந்தனர்.

நிவாரணம்...

ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கிய இப்படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் விஜயலட்சுமி நடித்திருந்தார். இப்படத்தை எதிர்த்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Maverick filmmaker Ram Gopal Varma, known for path-breaking films such as “Sarkar” and “Rakht Charitra”, will next make a movie titled “Killing Veerappan” on the man who gunned down the dreaded smuggler.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos