»   »  ஜெனிலியாவின் கணவரை கொந்தளிக்கச் செய்த சன்னி லியோன் டிரெய்லர்

ஜெனிலியாவின் கணவரை கொந்தளிக்கச் செய்த சன்னி லியோன் டிரெய்லர்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை சன்னி லியோன் நடிப்பில் வெளியாகி இருக்கும் மஸ்தி ஜாதே பட டிரெய்லர் நடிகர் ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சன்னி லியோன் 2 வேடங்களில் நடித்திருக்கும் படம் மஸ்தி ஜாதே. 27 விதமான பிகினி அணிந்து சன்னி லியோன் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் கடந்த டிசம்பர் 23ம் தேதி வெளியானது.

Ritesh Deshmukh Slams Mastizaade Makers

இதுவரை இந்த டிரெய்லரை சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். ஆனால் ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கை இந்த டிரெய்லர் பயங்கர கோபப்படுத்தியிருக்கிறது.

இந்த படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் இரண்டொரு காட்சிகளில் நடித்துக் கொடுத்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்த ரித்தேஷின் புகைப்படத்தையோ, காட்சிகளையோ புரோமொஷனுக்கு பயன்படுத்தக் கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

ஆனால் படக்குழுவினர் ஒப்பந்தத்தை மீறி பட டிரெய்லரில் ரித்தேஷ் தேஷ்முக் தோன்றுவது போன்ற சில காட்சிகளை காட்டியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த ரித்தேஷ் "மஸ்தி ஜாதேவில் 2 காட்சிகள் மற்றும் ஒரு பாடலில் மட்டுமே நான் தோன்றுகிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். நமது ஒப்பந்தத்திற்கு உண்மையாக இருங்கள்.

என் ஒப்பந்தத்தை மீறி என்னை பட புரோமொஷனில் பயன்படுத்துவது வெட்கக் கேடானது. நாம் போட்ட ஒப்பந்தத்தை மீறி என்னை நீங்கள் பயன்படுத்தியது எனது நம்பிக்கையை உடைத்து விட்டது" என்று கூறியிருக்கிறார்.

இதற்கு மஸ்தி ஜாதே படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood Actor Ritesh Deshmukh Slams Sunny Leone's Mastizaade Movie Makers. He Wrote on Twitter Page "I am part of 2 scenes and a song in MastiZaade -nothing more. I am requesting the makers again- Please honour our agreement. #Disappointed".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos