twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா வியாபார முறையை மாற்றினால் 8 கோடி தமிழரும் படம் பார்க்கலாம்! - ஆர்கே

    By Shankar
    |

    தமிழ் சினிமாவின் வியாபார முறையை மாற்றினால் 8 கோடிப் பேரும் படம் பார்க்கலாம், என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே கூறினார்.

    நேற்று நடந்த வைகை எக்ஸ்பிரஸ் இசை வெளியீட்டு விழாவில் ஆர்கே பேசுகையில், "ஒரு சிறந்த தயாரிப்பு என்றால் மக்களிடம் கொண்டு சேர்க்க மார்க்கெட்டிங் சிறப்பாக இருக்கவேண்டும் எந்த தயாரிப்பு நன்றாக இருந்தாலும் மார்க்கெட்டிங் மூலம் இந்தியா முழுக்க கொண்டு செல்ல முடியும் . உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும். உலகத்திலேயே சிறந்த தயாரிப்பு சினிமா. ஆனால் அதை மார்க்கெட்டிங் செய்ய முடியாமல் சினிமா உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

    RK introduces new distribution system for Vaigai Express movie

    எல்லாருமே தங்கம் வாங்கினாலும் கூட ஒன்று இலவசம் என்கிறார்கள். எந்தப்பொருள் வாங்கினாலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிறார்கள்.இந்திய சினிமா உலகம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது, உயர்ந்திருக்கிறது. ஆனால் வியாபாரம் உயரவில்லையே ஏன்? எங்கோ பின்தங்கியிருக்கிறது, ஏன்?

    மார்க்கெட்டிங் மாறினால் எல்லாம் மாறும். இந்த உலகில் இழந்த உயிரைத் தவிர அனைத்தையும் மீட்டுக் கொண்டுவர முடியும். அப்படி சினிமா வியாபாரத்தையும் மீட்டுக் கொண்டுவர முடியும். நல்ல வியாபார முறையை நமக்கு கற்றுக் கொடுத்தால் வெற்றி பெற முடியும் .

    RK introduces new distribution system for Vaigai Express movie

    எல்லா தியேட்டரின் டிக்கெட்டும் ஏன் ஒரிடத்தில் கிடைப்பதில்லை? மார்க்கெட்டிங் மாறினால் எல்லாம் மாறும். இதுதான் எனக்குள் ஐந்து ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த சிந்தனை .

    100 பேருக்கு 200 பேர் இலவசமாகப் படம் பார்க்கலாம். குடும்பம் குட்டியோட மக்கள். சந்தோஷமா படம் பார்க்கட்டுமே... டிக்கெட்டுக்கு 100 ரூபாய்க்கு 300 ரூபாய் வாங்குவதைவிட 100 ரூபாய்க்கு 3 பேரைப் பார்க்க வைத்தால் வெற்றி பெறலாம். இன்று எல்லாமே மாறிவிட்டது. ஆன் லைனில் புக் பண்ண 50 ரூபாய் டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள். 10 டிக்கெட்டுக்கு 300 ரூபாய் கட்டணம் வாங்கினால் விளங்குமா?

    நாங்கள் 5 ரூபாய் கொடு... அதை மக்களுக்கு கொடு என்கிறோம். இது தவறா? எங்க ஹிட் பாக்ஸ்ல டிக்கெட் விற்கிறவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய்தான் வாங்குகிறார்கள். 1 லட்சம் டிக்கெட் விற்றால் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார்கள். ஏன் ஏழைத் தமிழனும் லட்சாதிபதி ஆகட்டுமே? எங்கள் முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும் ஹிட் பாக்ஸில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரும் நிலை வரும்.

    சினிமா உலகம் வியாபாரத்தை மாற்றினால் 8 கோடி தமிழ் மக்களும் சினிமா பார்க்க வைக்க முடியும் ஒரு வருடம் கதையைத் தேர்வு செய்கிறோம். படப்பிடிப்பு ஒரு வருடம் செய்கிறோம். ஆனால் மார்க்கெட்டிங் என்ன என்றால் போஸ்டர் ஒட்டுகிறோம் என்கிறார்கள்.

    RK introduces new distribution system for Vaigai Express movie

    இந்த மார்க்கெட்டிங்கில் நாங்கள் தீவிரமாக இருந்தோம். அதனால்தான் 'வைகை எக்ஸ்பிரஸ் ' படம் தாமதம் போல் தெரிகிறது. படமெடுப்பதைவிட வியாபாரம் தானே முக்கியம்? எல்லா தியேட்டர்களிலும் 4 வாரங்கள் புக் ஆகும் தகுதி என் 'வைகை எக்ஸ்பிரஸ்' படத்துக்கு இருக்கிறது. அப்படி ஓடும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது," என்றார்.

    இந்தப் படத்துக்கா 1000 விநியோகஸ்தர்களை உருவாக்கியுள்ளார் ஆர்கே. இந்த ஆயிரம் பேரும் நேற்றைய விழாவில் கலந்து கொண்டனர்.

    English summary
    Actor, producer RK is introducing a new distribution system for his Vaigai express movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X