twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலேசியாவில் ரஜினிக்கு பிரமாண்ட வரவேற்பு.. மலாக்காவில் படப்பிடிப்பு தொடங்கியது!

    By Shankar
    |

    கோலாலம்பூர்: கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்ற ரஜினிகாந்துக்கு பிரமாண்டமான வரவேற்பு தரப்பட்டது. ஏராளமான தமிழர்கள், மலேசியர்கள் திரண்டு வந்து ரஜினிக்கு பூங்கொத்துகள் கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இதுவரை எந்தத் தமிழ் நடிகருக்கும், அரசியல் தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பு இது என மலேசிய பத்திரிகைகள் வியப்பு தெரிவித்துள்ளன.

    மலேசியாவில்

    மலேசியாவில்

    பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படப்பிடிப்பின் முதல் கட்டம் சென்னையில் நடந்துமுடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினியும் தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினரும் நேற்று மலேசியா சென்றனர்.

    பிரமாண்ட வரவேற்பு

    பிரமாண்ட வரவேற்பு

    விமான நிலையத்தில் ரஜினிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய போலீசார் மற்றும் பாதுகாப்பு குழுவினர் புடைசூழ ரஜினி கம்பீரமாக நடந்து வர, விமான நிலையத்துக்கு வெளியே ஏராளமான தமிழர்களும் மலேசிய மக்களும் குழுமி நின்று அவருக்கு வரவேற்பளித்தனர்.

    சொகுசு காரில்

    சொகுசு காரில்

    பிரமாண்டமான சொகுசு காரில் அவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் படப்பிடிப்பு நடக்கும் மலாக்காவுக்குச் சென்றார் ரஜினி.

    மலாக்கா கவர்னர்

    மலாக்கா கவர்னர்

    அங்கு மலாக்கா கவர்னர் முகமது கலீல் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். மலாக்கா மக்கள் சார்பில் ரஜினியை வரவேற்பதாகக் கூறிய கவர்னர், பின்னர் ரஜினிக்கு விருந்தளித்து அவருன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

    படமெடுத்துக் கொள்ள ஆர்வம்

    படமெடுத்துக் கொள்ள ஆர்வம்

    மலேசியாவில் ரஜினி போகுமிடமெல்லாம் அந்நாட்டு காவல் துறையினரும், அதிகாரிகளும், கவர்னர் மாளிகையிலிருந்தவர்களும், பொது மக்களும் அவருடன் படமெடுத்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்ட, அதைப் புரிந்து கொண்டு, அனைவருடனுமே சிரித்தபடி படமெடுத்துக் கொண்டார் ரஜினி.

    பத்திரிகைகள் வியப்பு

    பத்திரிகைகள் வியப்பு

    ரஜினிக்கு மலேசிய மக்களிடம் உள்ள செல்வாக்கு, அவர் செல்லுமிடங்களிலெல்லாம் திரளும் மக்கள் கூட்டம் பார்த்து வியப்புத் தெரித்து செய்தி வெளியிட்டுள்ளன மலேசியப் பத்திரிகைகள். 'கபாலி புயல் இப்போது மலேசியாவில் மையம் கொண்டுள்ளது' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளன.

    புகை மூட்டத்தை விரட்டி கபாலி புயல்..

    புகை மூட்டத்தை விரட்டி கபாலி புயல்..

    மலேசியா உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் புகை மூட்டம் காணப்பட்டது. ரஜினி மலேசியா வந்த அன்று பனிமூட்டம் விலகியிருந்ததால், அதை 'புகை மூட்டத்தை விரட்டிய கபாலி புயல்' என வர்ணித்து ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

    இன்னும் 60 நாட்கள்

    இன்னும் 60 நாட்கள்

    கபாலியின் படப்பிடிப்பு இன்னும் 60 நாட்களுக்கு வெளிநாடுகளில் நடக்கவிருக்கிறது. இப்போது மலாக்காவிலும், பின்னர் தாய்லாந்து மற்றும் ஹாங்காங்கிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த 60 நாட்களும் ரஜினி மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங்கில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். அவருடம் ரஜினியுடன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rajinikanth, who is in Malaysia for Kabali shooting, has got a rousing reception at Kuala Lumpur airport yesterday. Later Malacca Governor Mohammad Kalil gave a formal reception dinner to the actor at his palace.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X