twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராயல்டியை திருடுகிறார்கள்.. ஜி.வி.பிரகாஷ் குற்றச்சாட்டு

    By Mayura Akilan
    |

    'சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களிடமிருந்தும், பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றனர்" என்று எனது தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார்.

    சில ஆடியோ கம்பெனிகள் ராயல்டி விவகாரத்தில் இசை அமைப்பாளர்களை ஏமாற்றுகின்றனர். என்று ஜி.வி.பிரகாஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

    திருடும் ஆடியோ நிறுவனங்கள்

    திருடும் ஆடியோ நிறுவனங்கள்

    ‘'சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களிடமிருந்தும், பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றனர்.

    அடிப்படை உரிமை

    அடிப்படை உரிமை

    ராயல்டி என்பது ஒரு படைப்பாளையின் அடிப்படை உரிமை. அதை திருடுவது நாகரீகமற்ற செயல் மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமுமாகும்

    ஜி.வி.பிரகாஷ் கருத்துக்கு ஆதரவு

    ஜி.வி.பிரகாஷ் கருத்துக்கு ஆதரவு

    ஜி.வி.பிரகாஷ் குமாரின் குற்றச்சாட்டு பெரும்பாலான இளம் இசை அமைப்பாளர்கள் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். மூத்த பாடலாசிரியர்களான நா.முத்துக்குமார், யுகபாரதி, தாமரை போன்றோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பாடலாசிரியர்கள் சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்.

    மதன் கார்க்கி, வெங்கட் பிரபு

    மதன் கார்க்கி, வெங்கட் பிரபு

    நன்றி ஜி.வி. பிரகாஷ், இதற்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி டுவிட்டரில் கூறியுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் வெங்கட்பிரபுவும், ஜி.வி.பிரகாஷ்க்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.

    இசை அமைப்பாளர் ஆர்.ஹெச். விக்ரம்

    இசை அமைப்பாளர் ஆர்.ஹெச். விக்ரம்

    இது போராடுவதற்கான சரியான நேரம். ஜி.வி.பிரகாஷ் கருத்தை இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்கள் முதல்பக்கத்தில் வெளியிட்டு ஆதரவு கூறியுள்ளன நன்றி என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

    டி.இமான் பாராட்டு

    டி.இமான் பாராட்டு

    இளம் இசையமைப்பாளர் டி.இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு கருத்தை வெளியிட்டுள்ளார்.

    கவிஞர் வைரமுத்து

    கவிஞர் வைரமுத்து

    கண்டிப்பாக நாமும் ராயல்டியில் இருந்து பங்கு பெறவேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து கூறியுள்ளார்.

    English summary
    Young music scorer of South Indian film industry, GV Prakash who claimed against few audio companies for stealing the royalties from lyricists, has got a huge support from Tamil industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X