twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மஞ்சளில் குளிச்ச பலி ஆடு மாதிரி சென்சாரில் உட்காராதீங்க: எஸ்.வி. சேகர்

    By Siva
    |

    சென்னை: சென்சாரில் போய் உட்காரும்போது மஞ்சளில் குளிச்ச பலிக்கு போடுகிற ஆடு மாதிரி உட்காராதீர்கள் என்று இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார் எஸ்.வி. சேகர்.

    தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    இயக்குனர்கள்

    இயக்குனர்கள்

    சென்சாரில் யாரும் உதவி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இங்கு நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வந்துள்ளார்கள். தயவு செய்து நீங்கள் சென்சாரில் போய் உட்காரும்போது மஞ்சளில் குளிச்ச பலிக்கு போடுகிற ஆடு மாதிரி உட்காராதீர்கள்.

    சான்றிதழ்

    சான்றிதழ்

    இது உங்க படம். உங்கள் தயாரிப்பை நீங்களே விவாதித்து என்ன சர்டிபிகேட் வேண்டுமோ நியாயமா அந்த சர்டிபிகேட்டுக்கு உண்டான படம் எடுத்திருந்தால் அதை விவாதித்து வாங்குவதற்கான ரைட்ஸ் உங்களிடம் இருக்கிறது.

    சென்சார்

    சென்சார்

    நாம் ஏன் கடைசி நேரத்தில் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறோம் என்றால் ரிலீஸ் தேதியை வச்சுக்கிட்டு நாம் சென்சாருக்கு போகிறோம். சென்சார் போர்டு என்பவது திண்டிவனம் டோல் கேட் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அந்த பக்கம் தாண்டி போனால் காசு போட்டால் தாண்டி விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படி இல்லை.

    படம்

    படம்

    ஒரு படத்திற்கு 4 மாதங்களுக்கு முன்பே ஸ்கிரிப்டை தயார் செய்கிறோம். 6 மாதம் ஷூட்டிங் போகிறோம். போஸ்ட் புரொடக்ஷன் 4 மாதம் போகிறோம். சென்சாருக்கு மட்டும் ஒரு வாரம் டைம் கொடுத்துவிட்டு அவசரப்படுத்துகிறோம். அது ஒரு அரசு எந்திரம். அதுக்கு உண்டான ஒரு ஸ்பீடு இருக்கத் தான் செய்யும். அதை நாம் அவசரப்படுத்த முடியாது.

    தயாரிப்பாளர்

    தயாரிப்பாளர்

    தயாரிப்பாளர் தன்னுடைய பான் கார்டையும், ஆதார் கார்டையும் கரெக்டாக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பு மாதிரி வேறு யார் பெயரிலாவது கொடுத்துப் பண்ணுவது எல்லாம் தற்போது கடினம். இதே மாதிரி சென்றால் இன்னும் 2 ஆண்டுகளில் சினிமாவை ஒரு இன்டஸ்ட்ரியாக மக்களால் அங்கீகரிக்கப்படக்கூடிய நிலை ஏற்படும். அது இல்லை இது வரைக்கும் என்றார் எஸ்.வி. சேகர்.

    English summary
    Actor S.Ve. Shekher has requested directors and producers to be bold when sitting in censor board.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X