»   »  உலகமே எதிர்ப்பார்த்த 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' ட்ரைலர் வெளியீடு.. ரசிகர்கள் குஷி!

உலகமே எதிர்ப்பார்த்த 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' ட்ரைலர் வெளியீடு.. ரசிகர்கள் குஷி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தன் சுயசரிதையில் தானே ஹீரோவாக நடித்துள்ள சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டது.

குழந்தை பருவம் முதல் கிரிக்கெட் மீது கொண்ட ஈர்ப்பு முதல் கிரிக்கெட் உலகில் தேசத்தின் அடையாளமாக மாறிய சச்சினின் வாழ்க்கை பயணத்தை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதமாக 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் உருவாக்கபப்ட்டுள்ளது.

sachin movie trailer released

ஏற்கெனவே, முன்னாள் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து சச்சினின் சுயசரிதைப் படம் உருவாகியுள்ளது. ஆனால் டோணியில், அவரது பாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்தார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை சச்சினே ஹீரோவாக நடித்துள்ளார். எனவே இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்டது. 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படம் வருகிற மே 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Sachin Tendulkar's autobiography movie Sachin - A Billions Dream trailor launched today
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos