twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக... கிட்னா படத்தை 2 விதமாக எடுக்கும் சமுத்திரகனி!

    |

    சென்னை: தனது புதிய படமான கிட்னாவை இரண்டு விதமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி.

    நிமிர்ந்து நில் படத்தைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கிட்னா என்ற படத்தை எடுக்க உள்ளார் சமுத்திரக்கனி. இப்படத்தின் அனைத்து மொழிகளிலும் நாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார்.

    தெலுங்கு, கன்னட படங்களில் கிஷோர் நாயகனாக நடிக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறாராம் சமுத்திரக்கனி. அதாவது, இப்படத்தை அவர் இரண்டு விதமாக எடுக்கவிருக்கிறாராம்.

    முதன்முறையாக...

    முதன்முறையாக...

    ஒரே சினிமாவை இரண்டு விதமாக எடுப்பது தமிழ் சினிமாவில் இது தான் முதன்முறை எனக் கூறப்படுகிறது.

    இரண்டு வகைகளில்...

    இரண்டு வகைகளில்...

    அதன்படி, இப்படத்தை இரண்டே கால் மணி நேரம் ஓடக்கூடிய படமாகவும், 3 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு படமாகவும் என இரு விதத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் சமுத்திரக்கனி.

    கேன்ஸ்...

    கேன்ஸ்...

    கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு 3 மணி நேரம் ஓடக்ககூடய படத்தை அனுப்ப திட்டமிட்டு அவர் இவ்வாறு இரு விதமாக படத்தை எடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இரு விதமான படத்தையும் ரசிகர்கள் பார்க்கும் வகையில் ரிலீஸ் செய்யவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.

    க்ளைமாக்ஸ் ஒன்று தான்...

    க்ளைமாக்ஸ் ஒன்று தான்...

    இரண்டு விதமாக எடுக்கப்படும் இப்படத்தின் கதையும், இறுதிக்காட்சியும் ஒன்று தானாம். அது எடுக்கப்பட்ட விதம் தான் வேறுமாதிரியாக இருக்குமாம்.

    ரசிகர்களுக்காக...

    ரசிகர்களுக்காக...

    பொதுவான ரசிகர்களுக்காக ஒரு விதமாகவும், 3 மணி நேரம் செலவிட்டு திரைப்படம் பார்க்கும் தீவிர சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இன்னொரு விதமாகவும் இப்படம் எடுக்கப் பட உள்ளதாம்.

    ரிலீஸ்...

    ரிலீஸ்...

    பொதுவான ரசிகர்கள் ரசிக்கக்கூடிய படத்தை மூன்றில் இரண்டு பங்கு சென்டர்களிலும், சினிமா விரும்பிகளுக்கான படத்தை ஒரு பங்கு சென்டர்களிலும் வெளியிட முடிவு செய்யப் பட்டுள்ளது.

    உதாரணத்திற்கு...

    உதாரணத்திற்கு...

    உதாரணத்திற்கு, 150 சென்டர்களில் படத்தை வெளியிடுகிறோம் என்று வைத்துக் கொண்டால், முதல் பகுதியை 100 சென்டர்களிலும், இரண்டாம் பகுதியை 50 சென்டர்களிலும் வெளியிடுவோம் என சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

    English summary
    In what could well be a first-of-its-kind move in Tamil cinema, director Samudrakani plans to release two versions of his Tamil film Kitna, which, incidentally , he intends to show at the Cannes Film Festival next year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X