»   »  நீண்ட நாளைக்குப் பிறகு சகோதரத்துவத்தின் பெருமை சொல்லும் சாந்தன்!

நீண்ட நாளைக்குப் பிறகு சகோதரத்துவத்தின் பெருமை சொல்லும் சாந்தன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சகோதரத்துவத்தை கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் சாந்தன்.

ரத்த பாசத்தின் ஆழத்தை மிக உன்னதமாக எடுத்துரைக்கும் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

சிற்பி மாதேஸ்

சிற்பி மாதேஸ்

விரைவில் வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தில் சிற்பி மாதேஸ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் சுகுமார், காஷிஹா, மது, பெஞ்சமின், தேவேந்திரன், சாரதி, போண்டா மணி போன்ற பலர் நடித்துள்ளனர்.

சாம்ராஜ்

சாம்ராஜ்

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாம்ராஜ் இயக்கியுள்ளார். உமா மகேஷ்வரன் ஒளிப்பதிவையும் ரவி பிரியனும் இசையையும் அமைத்துள்ளனர். இப்படத்தை எம்.கே. சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக எம்.மாதேஸ்வரன் தயாரித்துள்ளார்.

மாதேஸ்வரன்

மாதேஸ்வரன்

இப்படத்தை இவர் தயாரிப்பதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார். இப்படத்தைப் பற்றி அவர் கூறும்போது, "இப்படத்தில் கதைதான் நாயகன். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் இப்படத்தில் நான் நடித்தேன்," என்றார்.

இரு சகோதரர்கள்

இரு சகோதரர்கள்

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் இரண்டும் சகோதரர்களின் வாழ்க்கையில் நிகலும் சம்பவங்களையும் திருப்பு முனைகளையும் அற்புதமான கிராமத்து நகைச்சுவைகளுடன் கலந்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

English summary
Santhan is a movie making with theme of brotherhood after a long time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos