» 

‘பட்டத்து யானை’யில் சந்தானத்தின் ‘மூன்று முகம்’

Posted by:
 

சென்னை: காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலைய வரும் காமெடி நடிகர் சந்தானம் விரைவில் திரைக்கு வர இருக்கின்ற பட்டத்து யானை திரைப்படத்தில் மூன்று வேடங்களில் கலக்கியிருக்கிறாராம்.

இரண்டு வருட காலமாக வடிவேலு எந்த படத்திலும் நடிக்காத நிலையில், காமெடிக்கு வேறு சொல்லிக் கொள்கிற மாதிரி போட்டியும் இல்லாததால் சந்தானத்தின் கை ஓங்கி இருக்கிறது.

கை நிறைய படங்களோடு செம பிஸியாக இருக்கும் சந்தானம், திரைப்பட விழாக்களில் கூட கலந்து கொள்வதில்லை.

காமெடி சூப்பர் ஸ்டார்...

தனது வித்தியாசமான பேச்சாலும், நடிப்பாலும் ரசிகர்களை தனது கைக்குள் பிடித்து வைத்திருக்கும் சந்தானம், உண்மையிலேயே கடின உழைப்பாளி தான். திரையில் சந்தானத்தைப் பார்த்ததும் ஹீரோவை விட அதிக கைத்தட்டல்கள் சந்தானத்துக்குத் தான் கிடைக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

பட்டத்து யானையில் சந்தானம்...

தற்போது சந்தானம் கைவசம் உள்ள படங்களில் பட்டத்து யானையும் ஒன்று. விஷால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.

வெற்றிப்படமாக்க முயற்சி...

மைக்கேல் ராயப்பன் படத்தின் தயாரிப்பாளர். படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இயக்குநர் பூபதி பாண்டியனோடு ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர் படக்குழுவினர்.

வெற்றி நிச்சயம்...

தங்கள் வெற்றியில் சந்தானத்தின் பெரும் பங்கு இருக்க வேண்டும் என விரும்பிய இயக்குநர், சந்தானத்திற்கு மூன்று கதாபாத்திரங்களை வாரி வழங்கியுள்ளார். தாத்தா, அப்பா மற்றும் மகன் என ட்ரிபிள் ஆக்‌ஷனாம் சந்தானம். தன்னால் இயன்ற அளவிற்கு முழு முயற்சியோடும், எனர்ஜியோடும் காமெடி ட்ராக்கை செய்துள்ளாராம்.

Read more about: santhanam, pattathu yaanai, vishal, triple role, பட்டத்து யானை, சந்தானம், விஷால், ஐஸ்வர்யா, அர்ஜூன், காமெடி, சூப்பர் ஸ்டார்
English summary
Now, Santhanam is doing with Vishal in the movie Pattaththu Yaanai. This movie has Arjun’s only daughter Aishwarya doing opposite Vishal. As everyone in the team want success, they have used Santhanam to the maximum. Santhanam will be doing triple role for this movie. He will be appearing as Grandpa, Father and son.

Tamil Photos

Go to : More Photos