twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3 வருடத்தில் முன்னணி.. சந்தோஷ ராகம் இசைக்கும் சந்தோஷ் நாராயணன்!

    By Manjula
    |

    சென்னை: இசையமைக்க வந்த 3 வருடங்கள் முழுதாக முடிந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

    2012 ல் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து இவரது இசையில் வெளியான பீட்சா, சூது கவ்வும்,மெட்ராஸ், 36 வயதினிலே போன்ற படங்களின் பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் இந்த வருடம் மொத்தமாக 10 படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

    சந்தோஷ் நாராயணன்

    சந்தோஷ் நாராயணன்

    ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அட்டக்கத்தி வெற்றிப் படமாக மாறியதில் திரையுலகினரின் பார்வை சந்தோஷின் மீது விழ ஆரம்பித்தது.

    சிறிய பட்ஜெட்

    சிறிய பட்ஜெட்

    மெட்ராஸ், குக்கூ, பீட்சா, சூது கவ்வும் போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்த சந்தோஷிற்கு தற்போது அவர் எதிர்பாராத பெரிய வாய்ப்புகளும் வந்து கதவைத் தட்டுகின்றன.

    கபாலி

    கபாலி

    ரஞ்சித் புண்ணியத்தில் கடந்த ஆண்டு ரஜினியின் கபாலி வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. கபாலி கிடைத்த அதிர்ஷ்டம் கைநிறைய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சந்தோஷ்.

    விஜய், தனுஷ்

    விஜய், தனுஷ்

    தற்போது இவரது கைகளில் ரஜினின் கபாலி, விஜய் 60, தனுஷின் கொடி, உதயநிதி ஸ்டாலினின் மனிதன், கார்த்தியின் கஷ்மோரா, கார்த்திக் சுப்புராஜின் இறைவி, செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும், நாகேஷின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் உள்ளன.

    இறுதிச்சுற்று

    இறுதிச்சுற்று

    இன்று வெளியாகியிருக்கும் இறுதிச்சுற்று படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான வா மச்சானே, ஏ சண்டைக்காரா போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன.

    மொத்தம் 10 படங்கள்

    மொத்தம் 10 படங்கள்

    இறுதிச்சுற்று படத்தையும் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 10 படங்கள் இவரது கைவசம் உள்ளன. இதன் மூலமாக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

    மொத்தத்தில் சந்தோஷிற்கு சந்தோஷமானதொரு ஆண்டாக மாறியிருக்கிறது 2016!

    English summary
    2016:Music Director Santhosh Narayanan Composed more than 9 films this year. Now he Progressed Leading music Composer in Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X