twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிவி சேனல்களுக்கு சினிமா தயாரிப்பாளர்கள் கிடுக்கிப்பிடி… விளம்பரங்கள் தர புதிய கட்டுப்பாடு

    By Mayura Akilan
    |

    சென்னை: புது திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை வாங்கும் சேனல்களுக்கு மட்டுமே அந்த படத்தின் விளம்பரம் தரப்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் புது கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் ஜூலை 24ம்தேதி முதல் புதுப்படங்களின் ட்ரெய்லர், பாடல் காட்சி, காமெடி சீன் போன்றவற்றை சானல்களுக்கு தரப்போவது இல்லை என்றும் தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முடிவினால் தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன.

    தியேட்டரில் புதுப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே சேனல்களில் விளம்பரம் போட்டு அலறடிப்பார்கள். போஸ்டர் ஒட்டி ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்த காலம் போய் டிவி சேனல்களில் முன்னோட்டம், பின்னோட்டம், சைடோட்டம் போட்டுத்தான் ரசிகர்களை இழுக்க வேண்டியிருக்கிறது. சிறப்பு கண்ணோட்டம் வேறு போடவேண்டும். தவிர டிவி சேனல்களில் விளம்பரங்கள் வேறு சில கோடிகளில் செலவு செய்து ஒளிபரப்ப வேண்டும். இந்த சினிமா விளம்பரங்களின் மூலமே டிவி சேனல்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது.

    200 சினிமா ரிலீஸ்

    200 சினிமா ரிலீஸ்

    ஆண்டுக்கு 200 தமிழ் திரைப்படங்களுக்கு மேல் வெளியாகின்றன. இந்த திரைப்படங்கள் அனைத்துமே டிவியில் ஒளிபரப்பாகுமா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். பிரபல நடிகர்களான ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திக்கேயன் ஆகியோர் நடிக்கும் படங்களை மட்டுமே டிவி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு பல கோடி ரூபாய் கொடுத்து சேட்டிலைட் உரிமையை வாங்குகின்றன. அறிமுக நடிகர், நடிகையர்கள் நடிக்கும் படங்களின் சேட்டிலைட் உரிமையை வாங்குவதில்லை. தயாரிப்பாளர்கள் அணுகினாலும் சேனல்கள் கண்டு கொள்வதில்லையாம்.

    விளம்பரத்திற்கு பல கோடி

    விளம்பரத்திற்கு பல கோடி

    திரைப்படங்களை தயாரிக்க பல கோடி செலவு செய்யும் தயாரிப்பாளர்கள் விளம்பரங்களுக்காகவும் கோடிக்கணக்கில் கொட்ட வேண்டியிருக்கிறது. ஆனாலும் பிரயோஜனமில்லை. ஒரு சில படங்களைத் தவிர நூற்றுக்கணக்கான படங்களின் சேட்டிலைட் உரிமைகளை எந்த சேனல்களும் வாங்கவில்லை. படத்தின் டிரெயிலர், பாடல் காட்சிகள், கிளிப்பிங்ஸ், காமெடி காட்சிகளை ஒளிபரப்பும் டிவி சேனல்கள் படத்தின் சேட்டிலைட் உரிமையை மட்டும் வாங்குவதில்லை என்பது தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு.

    பெரிய நடிகர்களின் படங்கள்

    பெரிய நடிகர்களின் படங்கள்

    ஜெயா டிவி அஜீத் நடித்த ஆரம்பம், விஜய் நடித்த கத்தி, ரஜினி நடித்த லிங்கா போன்ற பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே சமீபத்தில் வாங்கியுள்ளது.சன் டிவியோ கமல் நடித்த பாபநாசம், விஜய் நடித்துள்ள புலி, ராஜமௌலியின் பாகுபலி என பெரிய நடிகர்கள், பிரமாண்ட தயாரிப்பு படங்களை மட்டுமே கோடிகளை கொட்டி வாங்குகின்றன.

    விஜய் டிவியில்

    விஜய் டிவியில்

    ராஜ்டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட பல சேனல்களும் புது திரைப்படங்களின் ஒளிபரப்பு உரிமத்தை வாங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றன. காரணம் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் புதுப்படங்களை ஒளிபரப்பவேண்டும் என்பதற்காகத்தான்.

    எவர்கிரீன் ஹிட்

    எவர்கிரீன் ஹிட்

    இன்றைக்கும் டிவி சேனல்களில் ரஜினியின் சிவாஜி, எந்திரன், விஜயகாந்த் படங்கள், ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், விஜய் நடித்த கில்லி, அஜீத் நடித்த மங்காத்தா, உள்ளிட்ட பல ஹிட் படங்கள் ஒளிபரப்பானால் டிஆர்பி ஏகத்திற்கும் எகிறும்.

    போட்டாலும் பார்க்க மாட்டோம்

    போட்டாலும் பார்க்க மாட்டோம்

    அதே நேரம் சில படங்களை டிவியில் போட்டாலும் பார்க்க மாட்டோம் என்கிற ரீதியில் உள்ளது ரசிகர்களின் மனநிலை. எனவேதான் விளம்பரமும் கிடைக்காத, ரசிகர்களிடமும் வேகாத படங்களை கோடிகளை கொட்டி வாங்க வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்கின்றன சேனல்கள்.

    தனுசுக்கு வந்த சோதனை

    தனுசுக்கு வந்த சோதனை

    தனுஷ் நடித்து வெளிவந்த சமீபத்திய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. வசூல் ரீதியாகவும் வெற்றியும் பெற்றன. அநேகன் சறுக்கிவிட்டது என்னவோ உண்மைதான். இருப்பினும் அவரது புதுப்படமான 'மாரி' விலைபோகவில்லையாம். அதனால் தானே 9 கோடி கொடுத்து சேட்டிலைட் உரிமையை வாங்கி வைத்துள்ளாராம் தனுஷ்.

    நட்சத்திர கலைவிழா

    நட்சத்திர கலைவிழா

    அதே நேரத்தில் நடிகர், நடிகையர்கள் பங்கேற்கும் நட்சத்திர கலைவிழாவிற்கு டிவி சேனல் ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றன. அதனால்தான் சனி, ஞாயிறுகளில் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பல சேனல்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    தயாரிப்பாளர்கள் முடிவு

    தயாரிப்பாளர்கள் முடிவு

    இது ஒருபுறம் இருக்க சேனல்களின் புறக்கணிப்பு காரணமாக நொந்து, வெந்து போயுள்ள தயாரிப்பாளர்கள் ஒரு முடிவிற்கு வந்துள்ளனர். வியாழக்கிழமையன்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இரண்டு அமைப்புகளும் ஒன்றுகூடி ரகசிய கூட்டம் நடத்தி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.

    விளம்பரத்திற்கு பல கோடி

    விளம்பரத்திற்கு பல கோடி

    விளம்பரங்களுக்கு லட்சம் லட்சமாய் பணம் வாங்கிக் கொள்ளும் டிவி சானல்கள், படங்களின் சேட்டிலைட் உரிமையை வாங்க மறுப்பது ஏன் என்பது குறித்தும் அலசப்பட்டதாம். பெரிய நடிகர்கள் படங்களுக்கு விளம்பரம் கொடுப்பதே தவறு என்று சொல்லப்பட்டதாம்.

    ரஜினிக்கே ரூ.3 கோடி

    ரஜினிக்கே ரூ.3 கோடி

    ரஜினி படங்களுக்கு முன்பெல்லாம் விளம்பரமே செய்ய மாட்டார்கள். இப்போது ரஜினி பட விளம்பரங்களுக்கு டிவி சேனல்களுக்கு மட்டும் 3 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள்" என்று அன்பாலயா பிரபாகரன் கருத்து சொன்னாராம்.

    புதுப்பட காட்டிகள் கட்

    புதுப்பட காட்டிகள் கட்

    ஜூலை 24ம்தேதி முதல் புதுப்படங்களின் ட்ரெய்லர், பாடல்காட்சி, காமெடி சீன் போன்றவை இனிமேல் சானல்களுக்கு தரப்போவது இல்லை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு மனதாக முடிவு எடுத்து இருக்கிறார்களாம்.

    சேட்டிலைட் உரிமம்

    சேட்டிலைட் உரிமம்

    எந்த சானல் புதுப்படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்குகிறதோ அந்த சானலுக்கு மட்டுமே அந்த படத்தின் விளம்பரம் தரப்படும். அதுவும் 2 கோடி ரூபாய்க்கு உரிமையை வாங்கிவிட்டு, ஒன்றரை கோடிக்கு விளம்பரம் கேட்டால் தரமுடியாது. 25 லட்சம்வரைதான் விளம்பரம் தரப்படும் என்று வரையறை வகுத்து இருக்கிறார்களாம்.

    புதுப்படம் சீன்கள் பார்க்க முடியாதோ?

    புதுப்படம் சீன்கள் பார்க்க முடியாதோ?

    இந்த திட்டத்தை வருகிற 24ம்தேதி முதல் அமல்படுத்த இருக்கிறார்கள். திரைப்பட தயாரிப்பாளர்களின் இந்த திடீர் முடிவு குறித்து சேனல் வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போ இனி புதுப்படம் எப்படி இருக்குன்னு சேனல்கள் ஓட்ட முடியாதோ?

    English summary
    Tamil film producers association new plan against TV channals. Most producers depend on satellite-rights payments to clear their debts and release the film. Now with channels refusing to buy, the market has collapsed and traditional film producers have stopped production.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X