» 

எஸ்.ஜே.சூர்யாவின் 'இசை' யில் இசைஞானியாகும் சத்யராஜ்

Posted by:

சென்னை: இசையைக் கருவாகக் கொண்டு எஸ்.ஜே,சூர்யா இயக்கி, நடிக்கும் புதிய படத்தில் மூத்த இசையமைப்பாளராக நடிக்க சத்யராஜிடம் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறதாம்.

'வாலி' யில் அஜீத், குஷியில் விஜய் ஆகியோரை இயக்கி, முக்கிய இயக்குனர் வரிசையில் இடம்பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா.

இவர் தற்போது, 'இசை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக புதுமுகம் சாவித்ரி அறிமுகம் ஆகிறார்.

அன்பே... ஆருயிரே...

வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே ஆகிய சூப்பர் ஹிட் படங்களை டைரக்டு செய்தவர் எஸ்.ஜே.சூர்யா. .

இசையால் மயங்காத இதயமுண்டோ...

' இசை', 2 இசையமைப்பாளர்களை பற்றிய கதையாம். அதில் ஒருவர், மூத்த இசையமைப்பாளர். இன்னொருவர், இளைஞர். இரண்டு பேருக்கும் இடையே உருவாகும் தொழில் போட்டிதான் கதை பின்னணி.

என்னமா கண்ணு... செளக்கியமா?

இதில், மூத்த இசையமைப்பாளராக நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மற்றொரு இசையமைப்பாளராக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

மேஸ்ட்ரோவும்... ஆஸ்கார் நாயகனும்

இளையராஜாவையும், ஏ.ஆர்.ரகுமானையும் மறைமுகமாக குறிப்பிட்டே இந்த முக்கிய கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

See next photo feature article

7 டைரக்டர்ஸ்....

மேலும், இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், பிரபு சாலமன், விஷ்ணுவர்தன், வெற்றி மாறன், ராஜு சுந்தரம் ஆகிய 7 டைரக்டர்களும் நடிக்க இருக்கிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன.

Read more about: isai, sathyaraj, illayaraja, ar rahman, சத்யராஜ், இளையராஜா, ஏஆர் ரஹ்மான், இசை
English summary
Actor Sathyaraj is playing as Isaiganani Ilayaraja in S.J.Surya's new movie Isai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos