» 

அந்த 'யுஏ'- வுக்கு முத்தம் மட்டுமல்ல.. விஷால்- லட்சுமியின் இந்த 'ஜலபுல ஜங்ஸும்'தான் காரணமாம்!

Posted by:
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க:
        ஷேர் செய்ய         ட்வீட் செய்ய         ஷேர் செய்ய கருத்துக்கள்     மெயில்

விஷாலின் நான் சிகப்பு மனிதன் கடைசியில் யு ஏ சான்றிதழுடன்தான் வெளிவருகிறது. விஷாலும் படக் குழுவினரும் எவ்வளவோ போராடியும் சென்சார் அசைந்து கொடுக்கவில்லை.

யுஏ சான்று பெற்ற படங்களுக்கு கட்டாயம் வரிவிலக்கு கிடையாது. அரசின் சலுகைகளும் கிடைக்காது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் முன் மறுதணிக்கை செய்தாக வேண்டும்.

உறுதியாக இருக்கிறார் விஷால்...

ஒரு தயாரிப்பாளருக்கு இவை அனைத்துமே பெரும் சுமைகள்தான். ஆனால் அவற்றையெல்லாம் கூடத் தாங்கத் தயார் ஆனால் சென்சார் குறிப்பிடும் காட்சிகளை மட்டும் வெட்ட மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஷால்.

எந்தக் காட்சிகள் அவை...?

லட்சுமி மேனனை லிப் டு லிப் அழுத்தமாக விஷால் கிஸ்ஸடிக்கும் ஒரு காட்சி. அடுத்து தண்ணீருக்கடியில் விஷாலும் லட்சுமியும் ஆடும் ஜலபுலஜங்ஸ்தான்.

'நீர்விளையாட்டு'...

குறிப்பாக இந்த 'நீர்விளையாட்டு'தான் ரொம்பவே கவர்ச்சியாகத் தெரிவதால் அதை நீக்க வேண்டும் என சென்சார் சொல்ல, அட படத்துல முக்கிய சீனே அதாங்க.. நீக்க முடியாது என யுஏ சான்றிதழ் வாங்கி, அந்த சான்றிதழைக் கைகளில் பிடித்துக் கொண்டு போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார் விஷால்!

தெலுங்கில் இந்திரடு..

இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்திரடு என்ற பெயரில் படத்தை வெளியிடுகிறார் ஆந்திராகாரான விஷால்

Read more about: vishal, censor, naan sigappu manithan, நான் சிகப்பு மனிதன், விஷால்
English summary
According to reports the intimate romantic underwater scenes of Vishal - Lakshmi Menon are the main reason for its UA censor certificate.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos