twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிருபர்கள் வெளியில் நிற்கிறார்களே... இயக்குநர் சீனு ராமசாமி வேதனை

    By Shankar
    |

    சினிமா என்பது பொதுத் துறை. இங்கு பத்திரிகையாளர்களை உள்ளே விடக் கூடாது என்று சொல்லக் கூடாது, என இயக்குநர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

    கடந்த சில தினங்களாகவே கொதிக்கும் கொப்பரையாக இருக்கிறது கோடம்பாக்கம். தமிழக முதல்வரும், இந்தியப் பிரதமரும் நாட்டையே இணைய மயமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், இன்டர்நெட்டா, அது ஏன் இப்போ?' என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் திரைப்படத் துறை.

    Seenu Ramasamy's speech at Pongi Ezhu Manohara

    இணையதள பத்திரிகையாளர்களை முற்றிலும் புறக்கணிப்பது என்கிற அவர்களது முடிவால் ஆங்காங்கே சர்ச்சைகள். போராட்டங்கள். குழப்பங்கள்.

    இந்த நேரத்தில் இன்று சென்னையில் நடந்த ‘பொங்கியெழு மனோகரா' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, அழுத்தம் திருத்தமாக ஒரு கருத்தை பதிய வைத்திருக்கிறார்.

    ‘சினிமா என்பது பொதுத்துறையை சேர்ந்த விஷயம். இங்கு பத்திரிகையாளர்களை உள்ளே விடக் கூடாது என்று சொல்வது முறையல்ல. எல்லா பத்திரிகையாளர்களும் வெளியே நிற்கிறார்கள். இந்த நிலையை உடனே மாற்ற வேண்டும்' என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

    நடிகர் சரத்குமார், ராதாரவி, பெப்ஸி சிவா போன்றவர்களும் இணையதள நிருபர்களுக்கு தங்கள் ஆதரவை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

    English summary
    Director Seenu Ramasamy asked the producers council to reconsider banning online medias.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X