»   »  ஷாரூக்கிற்கு தீரா வருத்தத்தை ஏற்படுத்திய தில்வாலே... படமா இது?

ஷாரூக்கிற்கு தீரா வருத்தத்தை ஏற்படுத்திய தில்வாலே... படமா இது?

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷாரூக் - கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே திரைப்படம் தனிப்பட்ட முறையில் ஷாரூக்கானுக்கு தீராத வருத்தத்தை ஏற்படுத்தி விட்டதாம்.

நீண்ட வருடங்கள் கழித்து ஷாரூக் - கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. போதாதற்கு ரோகித் ஷெட்டியின் இயக்கம் வேறு.

ஆனால் மோசமான திரைக்கதையால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒட்டுமொத்தமாக வீணடித்து விட்டது தில்வாலே.

தில்வாலே

தில்வாலே

ஷாரூக்கான், கஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் இணைந்து நடித்திருந்த படம் தில்வாலே. சென்னை எக்ஸ்பிரெஸ் படத்திற்குப் பின்னர் ரோகித் ஷெட்டி - ஷாரூக்கான் இணைந்தது, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கஜோல் - ஷாரூக் இணைந்து நடித்திருந்தது என்று படத்தின் மீது எதிர்பார்ப்பை எதிர்பார்க்க வைத்த விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஏமாற்றிய திரைக்கதை

ஏமாற்றிய திரைக்கதை

படத்தில் முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் இருந்தும் கூட மோசமான திரைக்கதை அனைத்தையும் காலி செய்து விட்டது. ஷாரூக் - கஜோல் ஜோடியைப் பார்க்க ஒருபக்கம் தியேட்டர்களில் கூட்டம் அலைமோத, மற்றொருபுறம் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு பதிலாக இறந்து விடலாம் என்று மோசமான விமர்சனங்களும் எழுந்தன.

ஜுஹி சாவ்லா

ஜுஹி சாவ்லா

ஷாரூக்கானின் நெருங்கிய தோழியும், நடிகையுமான ஜுஹி சாவ்லா தில்வாலே குறித்து நல்லவிதமாக கேள்விப்படாததால் அந்தப் படத்தை பார்க்க விரும்பவில்லை என்று கூறி அதிரடித்தார்.

தனிப்பட்ட முறையில்

தனிப்பட்ட முறையில்

"தில்வாலே இப்படி ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கும் இப்படம் வருத்தத்தை அளித்திருக்கிறது" என்று நடிகர் ஷாரூக்கானையும் புலம்ப வைத்துவிட்டது தில்வாலே.

350 கோடி

350 கோடி

உலகளவில் படம் 350 கோடியை வசூலில் தொட்டிருந்தாலும் "ஆபரேஷன் சக்ஸஸ் பட் பேஷன்ட் அவுட்" என்ற ரீதியில் ஆகிவிட்டது தில்வாலே வசூல்.

பாஜிரோ மஸ்தானி

பாஜிரோ மஸ்தானி

அதே நேரம் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான பாஜிரோ மஸ்தானி திரைப்படம் விமர்சனம் + வசூல் இரண்டிலும் கலக்கி வருகிறது.இதுவரை 300 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் சாதித்து வருகிறது.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

முன்னதாக தில்வாலே படத்தை சற்று தள்ளி வெளியிடுமாறு நடிகை தீபிகா படுகோன் கேட்டுக் கொண்டபோது ஷாரூக்கான் மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Box Office: "Dilwale is such that I did not expect. Personally I Regret that the film" Shah Rukh Khan says in Recent Interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos