»   »  சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை தரும் நடிகர்களின் பெயரை சொல்லட்டா?: ரெமோ வினியோகஸ்தர்

சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை தரும் நடிகர்களின் பெயரை சொல்லட்டா?: ரெமோ வினியோகஸ்தர்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனைகள் செய்யும் நடிகர்களின் பெயரை கூறட்டுமா என ரெமோ வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி அழுதார். இன்னும் எவ்வளவு மிரட்டுவீர்கள், என்னை மிரட்டுபவர்கள் யார் என உங்களுக்கே தெரியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து ரெமோ படத்தின் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

நடிகர்கள்

நடிகர்கள்

சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனைகள் மேல் பிரச்சனை கொடுத்து வரும் பல நடிகர்களின் பெயர்களை நான் இங்கே கூறட்டுமா என்ற சுப்பிரமணியம் அந்த பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

விஷால்

விஷால்

விஷால் தனது படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக கூறியுள்ளாரே எங்கே என்னிடம் வந்து அதை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர் படங்களுக்கு நான் எவ்வளவு உதவியிருப்பேன். அப்படி இருக்கும்போது அவரால் எப்படி இவ்வாறு பேச முடிகிறது என சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிம்பு

சிம்பு

சிம்புவின் வாலு படத்தை வெளியிட நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன். அதை சிம்புவை அவரது தந்தை டி. ராஜேந்தரிடம் போய் கேட்கச் சொல்லுங்கள் என்கிறார் சுப்பிரமணியம்.

சிவா

சிவா

சிவகார்த்திகேயனை மிரட்டியது தயாரிப்பாளர்கள் என்று பலரும் நினைத்த நிலையில் திருப்பூர் சுப்பிரமணியம் நடிகர்கள் பிரச்சனை செய்வதாக கூறியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

English summary
Remo distributor Tirupur Subramaniam said in a function that,' Shall i reveal the names of the actors who trouble Sivakarthikeyan?'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos