» 

‘எ’ முதல் ‘ஒய்’ வரை ஓவர்... சம்மர் ஸ்பெஷலாக ‘ஐ’ ரிலீசாகலாம்: ஷங்கர் சூசகம்

Posted by:

சென்னை: இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் மீதமுள்ளதாகவும், அதுவும் முடிவடைந்து விட்டால் 'ஐ' படம் கோடை விடுமுறைக்கு வெளியாகலாம் என தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிக்க தயாராகி வரும் படம் 'ஐ'. இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட வெளிவராத நிலையில் படத்தகவல்களைப் படு ரகசியமாக காத்து வருகிறார் ஷங்கர். இதனாலேயே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில், படம் வரும் கோடைக்கால விடுமுறையில் கூட வெளியாகலாம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சந்தோஷ அதிர்ச்சி அளித்துள்ளார் ஷங்கர்.

இது தொடர்பாக ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது :-

வரும் 25ம் தேதியோடு...

‘எ' முதல் ‘ஒய்' வரை 'ஐ' திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி முடிந்துவிட்டது. விக்ரம் மற்றும் விட்டா தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகள் 25ம் தேதியோடு முடிந்துவிட்டது.

எமியின் பாடல்....

இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் ஏமி ஜாக்சனை வைத்து படமாக்கப்பட இருக்கிறது. எடிட்டிங், டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சம்மர் ஸ்பெஷல்...

அனைவருமே படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள். அனைத்தும் நல்லவிதமாக அமையும் பட்சத்தில் 'ஐ' கோடை விடுமுறைக்கு வெளியாகலாம்.

பெரீய்ய.... பட்ஜெட்

பெரிய பட்ஜெட் படம் என்பதால், பட வெளியீடு தயாரிப்பாளரின் திட்டமிடுதலிலும் இருக்கிறது" என இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

See next photo feature article

பர்ஸ்ட் லுக் கூட....

இப்படத்திற்காக பல்வேறு வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருவதால், படம் எப்போது தயாராகும், எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: ai, shankar, vikram, release, summer, விக்ரம், ரிலீஸ், கோடை விடுமுறை
English summary
The details of veteran director Shankar's Ai have been kept under wraps. This has raised lot of curiosity among the audience. Now the director himself has come out and revealed few details about the film on his social networking page.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos