» 

ஷங்கரின் ஐ... ஏப்ரல் 14-க்கு நிச்சயம்?

Posted by:

சென்னை: இயக்குநர் ஷங்கரின் பிரமாண்ட படமான ஐ வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிவிடும் என்று தெரிகிறது.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், விக்ரம் - எமி ஜாக்சன், சந்தானம் நடிக்கும் ஐ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

அடுத்த இரு வாரங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.

வித்தியாச விக்ரம்

படத்தின் கேரக்டருக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தன்னை வருத்திக் கொள்ளத் தயங்காத விக்ரம், இந்தப் படத்தில் நோஞ்சானாகத் தோன்றுகிறார். அதற்காக அநியாயத்துக்கு உடம்பைக் குறைத்து மெலிந்து நடித்துள்ளார்.

 

 

வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள்

விக்ரமுக்கான வித்தியாசமான மேக்-அப்பை சீன் ஃபூட் மற்றும் டவினா லமோன்ட் ஆகிய வெளிநாட்டு நிபுணர்கள் செய்துள்ளனர்.

ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்துக்காக மிகவும் சிரத்தை எடுத்து 6 பாடல்களை உருவாக்கியுள்ளார். அனைத்துமே மெகா ஹிட் எனும் அளவுக்கு வந்துள்ளனவாம். பிசி ஸ்ரீராம் முதல்முறையாக ஷங்கருடன் இணைந்துள்ள படம் இது.

See next photo feature article

ஏப்ரல் 14..

இந்தப் படத்தின் ஷூட்டிங் மிக வேகமாக நடந்து வருகிறது. அடுத்த இரு வாரங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும் என்றும், ஏப்ரல் 14-ம் தேதி படத்தை வெளியிடுவது உறுதி என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Read more about: shankar, shooting, ai, , ஷங்கர், விக்ரம்
English summary
Vikram's Shankar directed movie I shooting is nearing its final stage and scheduled for April 14.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos