twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாசிக் கோவிலில் ஆமீர் கானின் பி.கே. படப்பிடிப்புக்கு எதிர்ப்பு

    By Siva
    |

    மும்பை: நாசிக்கில் உள்ள கோவிலில் ஆமீர் கானின் பி.கே. படப்பிடிப்பை நடத்த எதிர்ப்பு கிளம்பியதால் படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான் நடித்து வரும் படம் பி.கே. கையில் ஒரு டேப்ரிக்கார்டரை வைத்துக் கொண்டு நிர்வாணமாக ஆமீர் போஸ் கொடுத்தாரே அது இந்த பி.கே. படத்திற்காகத் தான்.

    இந்த படத்தின் சில காட்சிகளை மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ராமர் கோவிலில் படமாக்க முடிவு செய்தனர்.

    கோவில்

    கோவில்

    கோவிலுக்கு சென்ற படக்குழு படப்பிடிப்பை துவங்கி நடத்தியது. திடீர் என்று மதிய வேளையில் கோவிலுக்கு வந்த டிரஸ்டீக்கள் படப்பிடிப்பை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்றனர். இதனால் சிறிது நேரம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஆமீர்

    ஆமீர்

    இந்த சம்பவம் நடந்தபோது ஆமீர் கான் கோவில் வளாகத்தில் தான் இருந்தார்.

    அனுமதி

    அனுமதி

    கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் படப்பிடிப்பை நடத்த கடந்த 2ம் தேதி அனுமதி பெற்றதுடன் கோவிலுக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை அளித்ததற்கான ரசீதை படக்குழுவினர் காட்டினர். அதன் பிறகு படப்பிடிப்பை நடத்த டிரஸ்டீக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    பலத்த பாதுகாப்பு

    பலத்த பாதுகாப்பு

    ஆமீர் கானின் படப்பிடிப்பை பார்க்க அங்கு கூட்டம் கூடிவிட்டது. இகையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பி.கே. டிசம்பர் 19ம் தேதி ரிலீஸாகிறது.

    English summary
    Shooting of the Bollywood actor Aamir Khan's upcoming film PK in famous Kala Ram temple was briefly affected after some of the trustees of the shrine alleged that the shooting unit has not taken necessary permission.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X