»   »  கவுதமியை பார்த்தியா... என்ன பார்த்தியா: இப்படி ஆகிட்டாரே ஸ்ருதி

கவுதமியை பார்த்தியா... என்ன பார்த்தியா: இப்படி ஆகிட்டாரே ஸ்ருதி

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதமியை சந்திக்க நேரம் இல்லை என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸன் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் அவரின் மகளாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். துணை இயக்குனராக அக்ஷரா ஹாஸன் உள்ளார். காஸ்ட்யூம் டிசைனராக கவுதமி உள்ளார்.

இந்நிலையில் தான் உடை தொடர்பாக ஸ்ருதிக்கும், கவுதமிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ஸ்ருதி திட்டவட்டமாக மறுத்தார்.

கவுதமி
  

கவுதமி

அந்த சம்பவத்திற்கு பிறகு கவுதமியை சந்தித்தீர்களா என்று செய்தியாளர்கள் ஸ்ருதியிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், நான் படப்பிடிப்பில் பிசியாக உள்ளேன். என் தந்தை, தங்கை, நண்பர்களை பார்க்க தான் நேரம் உள்து. அனைவரையும் பார்க்க நேரம் இல்லை என்றார்.

 

 

மதிக்கிறேன்
  

மதிக்கிறேன்

இந்த உலகில் என் தந்தை கமல் தான் எனக்கு மிகவும் முக்கியமானவர். அப்படி இருக்கும்போது அவருக்கு யாராவது முக்கியமானவர்களாக இருந்தால் அவர்களை நான் மதிக்கிறேன் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

 

 

செவாலியே
  

செவாலியே

எனக்கு செவாலியே விருது கிடைத்துள்ளது. இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. அதற்கு முன்பு உனக்கு தெரியப்படுத்த விரும்பினேன் என என் தந்தை எஸ்.எம்.எஸ். அனுப்பினார். சினிமாவுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். அவருக்கு விருது கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

கிசுகிசு
  

கிசுகிசு

என்னைப் பற்றி என்னவெல்லாம் எழுதுகிறார்கள் என்பதை சமூக வலைதளங்கள் மூலம் அறிகிறேன். கிசுகிசுக்களை எல்லாம் நான் கண்டுகொள்வதே இல்லை. யாரோ நேரம் செலவிட்டு என்னை பற்றி செய்தி எழுதுகிறார்கள் என்றால் நான் ஏதோ சரியாக செய்துள்ளேன்.

English summary
Shruti Haasan said that she doesn't have time to meet her dad's special person Gauthami. She added that she respects the person who is important to her dad.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos