»   »  வாலு பட தாமதத்திற்கு "மெய்யாலுமே" யார் காரணம் தெரியுமா...??

வாலு பட தாமதத்திற்கு "மெய்யாலுமே" யார் காரணம் தெரியுமா...??

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாலு படம் வெளிவர தாமதமானதற்கு முக்கியக் காரணம் நான் தான் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.

‘வாலு' படப் பிரச்சினையின் மூலம் எனக்கு உண்மை யானவர்கள் யார் என்பதை தெரிந்துகொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார்.


விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள படம் ‘வாலு'. பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இப்படம் நாளை ரிலீசாக உள்ளது.


இந்நிலையில், பாஸ்கியின் ‘பாஸ்கி டிவி' என்ற யூடியூப் சேனலுக்கு சிம்பு பேட்டியளித்துள்ளார். அதில் வாலு படம் தொடர்பாக தான் சந்தித்த பிரச்சினைகளை அவர் விவரித்துள்ளார்.


அப்பேட்டியில், ‘வாலு' திரைப்படம் வெளிவர தாமதமானதற்கு நீங்களும் ஒரு வகையில் காரணம் இல்லையா? எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலாவது:-


நான் தான் காரணம்...

முக்கியமான காரணம் நான் தான். இங்கே என் வெற்றிக்கான எல்லா விஷயங்களையும் நான் தான் செய்ய வேண்டும். என்னை எதிர்பார்ப்பவர்களுக்கான வேலையை நான் செய்ய வேண்டும்.


யாரிடமும் எதுவும் கேட்டதில்லை...

அப்பா எனக்காக நிறைய சம்பா தித்து வைத்திருக்கிறார். நானும் சம்பாதிக்கிறேன். மற்ற யாரிடமும் நான் எதுவும் கேட்டதில்லை.


ஆன்மீக வாழ்க்கை...

நான் சின்ன வயதில் இருந்தே வேலை பார்க்க தொடங்கியவன். ஒரு கட்டத்தில் நாம ஏன், இப்படி ஓட வேண்டும் என்ற கேள்வி எனக் குள் வந்தபோது ஆன்மிகத்துக்குள் சென்றேன்.


வாழ்க்கை பற்றிய புரிதல்...

அங்கே சென்ற பிறகுதான் வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதல் வந்தது. மீண் டும் இங்கே வராமல் அங்கேயே இருந்திருக்கலாம்.


இது தான் காரணம்...

ஆனால், ‘சிம்பு பயந்துவிட்டான்' என்று சொன்னால் என்ன செய்வது. அதனால்தான் மீண்டும் வந்தேன். அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறேன்.


யார் உண்மையானவர்கள்...

இந்த இடைவெளியிலும், நெருக்கடியிலும் எனக்கு உண்மையானவர்கள் யார் என்று தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு சம்பவம் இல்லாமல் போயிருந்தால் எனக்கு யாரெல்லாம் எதிரி என்று தெரியாமலேயே போயிருக்கும்.


பின்னணியில் இருந்தவர்கள்...

ஜூலை 17-ம் தேதி படம் ரிலீஸ் என்று முன்பே அறிவிக்கப்பட்டு விளம்பரம் வந்தது. அப்போதெல்லாம் விட்டு விட்டு படம் ரிலீஸாக ஒரு வாரம் மட்டுமே இருக்கும்போது ‘வாலு' படத்தை வெளியிடாமல் தடுக்க வேண்டும் என்று நிற்கிறார்கள். இதன் பின்னணியில் இருந்தது யார் என்பதை கண்டுபிடித்தேன்' என இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.


English summary
"I'm the reason for Vaalu movie's delayed release",says actor Simbu in an interview to a tamil daily.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos