» 

ஒரு வழியா வருது சிம்புவின் வாலு!

Posted by:

சென்னை: சிம்பு நடிப்பில் கடந்த இரு ஆண்டுகளாக வருமா வராதா என இழுத்தடித்துக் கொண்டிருந்த வாலு படம், விரைவில் வெளியாகிறது.

சிம்புவின் பிறந்த நாளன்று, இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள படம் 'வாலு'.

இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு ரொம்ப நாள் கழித்தும் முடியாமல் இழுத்துக் கொண்டே இருந்தது. இதற்கு சிம்புதான் காரணம் என சிலரும், இல்லையில்லை தயாரிப்பாளர்தான் காரணம் என சிலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிடப் போவதாக இப்படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் விஜய்சந்தர் கூறும்போதுகையில், "நானும், சிம்புவும் படத்தை வெளியிட தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளரின் நிதி நெருக்கடி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறது.

இந்த பிரச்சினை இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும். இன்னும் செட் போட்டு எடுக்கவேண்டிய பாடல்களும், வெளிநாடுகளில் எடுக்கப்பட வேண்டிய பாடல்கள் மட்டும் படமாக்கப்படாமல் உள்ளன. டிசம்பரில் இப்படத்தின் பாடல்களையும், பிப்ரவரி மாதம் சிம்பு பிறந்த நாளன்று படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

ஒரு காலத்தில் அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளராகத் திகழ்ந்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

Read more about: simbu, vaalu, சிம்பு, வாலு
English summary
Vijay Chandar, director of Simbu starring Vaalu has announced the release date of the movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos