»   »  விஜய்யின் கோட்டையில் பைரவாவை தோற்கடித்த 'சிங்கம் 3'

விஜய்யின் கோட்டையில் பைரவாவை தோற்கடித்த 'சிங்கம் 3'

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள பாக்ஸ் ஆபீஸில் விஜய்யின் பைரவா சாதனையை சிங்கம் 3 முறியடித்துள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்த சிங்கம் 3 படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. விஜய்யை போன்றே சூர்யாவுக்கும் கேரளாவில் ரசிகர்கள் அதிகம்.


Singam 3 beats Bairavaa in Kerala

சிங்கம் 3 படம் கேரளாவில் 218 அரங்குகளில் வெளியானது. படம் ரிலீஸான அன்று மட்டும் கேரளாவில் ரூ.2.32 கோடி வசூலித்துள்ளது. முன்னதாக விஜய்யின் பைரவா படம் ரிலீஸான அன்று ரூ.2.16 கோடி வசூலித்தது.


இதையடுத்து சிங்கம் 3 முதல் நாள் வசூலில் பைரவாவை முந்தியுள்ளது. சூர்யா சிங்கம் 3 படத்தை கேரளாவில் விளம்பரம் செய்தார். அவர் விளம்பரம் செய்தபோது கூட விஜய் ரசிகர் ஒருவர் தனது தளபதிக்கு சூர்யா மூலம் பரிசு கொடுத்து அனுப்பினார்.


சிங்கம் 3க்கு தமிழகத்தில் பெரிய அளவுக்கு ஓபனிங் கிடைக்காவிட்டாலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டு தான் இருக்கிறது.

English summary
Suriya's Singam 3 has beaten Vijay's Bairavaa at Kerala box office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos