»   »  பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை வந்தது: ரசிகர்கள் மகிழ்ச்சி

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை வந்தது: ரசிகர்கள் மகிழ்ச்சி

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் பாடகி வைக்கம் விஜலட்சுமி. அவருக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இனிய குரலில் பாடல்கள் பாடி ரசிகர்களை அசத்தி வருகிறார்.

Singer Vaikom Vijayalakshmi gets eyesight

குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

கண் பார்வைக்காக விஜயலட்சுமி தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பார்வை கிடைத்துள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜயலட்சுமிக்கு பார்வை வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

விஜயலட்சுமி தனது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறோம்.

English summary
Playback singer Vaikom Vijayalakshmi who is about to marry musician Santhosh has got her eyesight. It is noted that she was born blind.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos