டாணா… சிவகார்த்திக்கேயன் - தனுஷ் மோதலா?

By Mayura Akilan

சிவகார்த்திக்கேயனின் டாணா திரைப்படம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுசுக்கும் ஹீரோ சிவகார்த்திக்கேயனுக்கும் இடையே நடைபெறும் மறைமுக குஸ்தி பற்றிதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

மெரினாவில் தொடங்கி சினிமா பயணம், எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என தொடர்ந்தது சிவகார்த்திக்கேயனின் வெற்றிப்பயணம்

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது 'எதிர்நீச்சல்' டீம் மீண்டும் 'டாணா' படம் மூலம் இணைந்துள்ளது. ஆனால் கதாநாயகிதான் வேறொருவர்.

‘டாணா' என்பது தமிழ் வார்த்தைதான். இந்த வார்த்தைக்கு காவல் என்று அர்த்தமாம்.

வெற்றிக்கூட்டணி

வெற்றிக்கூட்டணி

இயக்குநர் துரை செந்தில்குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் இணைந்து 'டாணா' படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். மைனா', 'கும்கி' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் 'டாணா' படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 'மான் கராத்தே' படத்தின் ஒளிப்பதிவாளாரும் சுகுமார்தான். தனுசின் உண்டர்பார் பிலிம்ஸ்

காக்கிச்சட்டை சிவகார்த்திக்கேயன்

காக்கிச்சட்டை சிவகார்த்திக்கேயன்

டாணா படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை 6 கிலோ வரை கூட்டியுள்ளார்.

அப்பாவின் நினைவாக

அப்பாவின் நினைவாக

இவருடைய தோற்றம் இந்த படத்தில் வித்தியாசமாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர். போலீஸ் உடையில் நடித்தது தனக்கு அப்பாவை நினைவுப்படுத்தியது என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

வெற்றி ஜோடி

வெற்றி ஜோடி

சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்த ஜோடி ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி ஜோடியாகும்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரேயொரு பாடல் மட்டும் படமாக்கப்படவுள்ளது. விரைவில் படத்தை முடித்துவிட்டு ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பில் தனுஷ்

படப்பிடிப்பில் தனுஷ்

தன்னுடைய சொந்த தயாரிப்பு என்பதால் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்று நண்பேண்டா பாணியில் வாழ்த்து தெரிவித்து வந்தார் தனுஷ்.

தனுஷ் - சிவகார்த்திக்கேயன்

தனுஷ் - சிவகார்த்திக்கேயன்

ராமன்-லட்சுமணனாக இருந்த இவர்கள் உறவிற்குள், யார் கண் பட்டதோ தற்போது விரிசல் விடத்தொடங்கியது. இதன் முதற் கட்டமாக தனுஷ், டாணா படத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு கை மாற்றிவிட்டாராம் தனுஷ்.

நேரடி மோதல்

நேரடி மோதல்

இதற்கெல்லாம் மேலாக டாணா படத்தின் ரிலிஸின் போதே, தன் அனேகன் படத்தையும் ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம் தனுஷ். இதன் மூலம் சிவகார்த்திக்கேயன் தனுஷ் நேரடியாக மோத முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

 அதெல்லாம் சும்மா..

அதெல்லாம் சும்மா..

அதேசமயம் இதெல்லாம் சும்மா, வெறும் பரபரப்புதான்... இன்னமும் எல்லோரும் நண்பேண்டாதான் என்று கூறியுள்ளார் இவர்களின் நட்பு வட்டத்தில் உள்ள தனுஷ். எது உண்மையோ? டாணா வெளியானால்தான் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X