»   »  ரெமோ... 50 நிமிடங்கள் பெண்ணாக வரும் சிவகார்த்திக்கேயன்!

ரெமோ... 50 நிமிடங்கள் பெண்ணாக வரும் சிவகார்த்திக்கேயன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ படத்தில் சுமார் 40 முதல் 50 நிமிடங்கள் சிவகார்த்திக்கேயன் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அதன் சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.

Select City
Buy Remo (U) Tickets

ரஜினி முருகன் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.


3 வேடங்கள்...

3 வேடங்கள்...

படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் சிவகார்த்திக்கேயன் மூன்று வேடத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.


பெண் வேடம்...

பெண் வேடம்...

இந்நிலையில், அதில் ஒரு வேடம் பெண் கதாபாத்திரம் எனக் கூறப்பட்டு வந்தது. தற்போது அத்தகவலை ரசூல் பூக்குட்டி உறுதி செய்துள்ளார். இப்படத்தில் அவர் 40 முதல் 50 நிமிடங்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளாராம்.


பாராட்டு...

பாராட்டு...

இது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர், "சிவகார்த்திகேயன் சாதாரண ஒரு மனிதராக இருந்து இன்று பெரிய ஹீரோவாக உருவாகியிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பெண்ணாகவும் நடித்துள்ளார்" எனப் பாராட்டியுள்ளார்.


மிமிக்ரி...

மிமிக்ரி...

வழக்கமாக ஹீரோக்கள் பெண் வேடங்களில் நடித்தால் அவர்களுக்கு பெண் கலைஞர்களை வைத்து டப்பிங் பேசுவது வழக்கம். ஆனால், சிவகார்த்திக்கேயன் மிகச்சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பதால், தனது பெண் கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங் பேச அவர் விருப்பப்பட்டாராம்.
ரசூலின் திட்டம்...

ரசூலின் திட்டம்...

ஆனால், அது சரிப்பட்டு வரவில்லையாம். எனவே, எப்போதும் போல் சிவகார்த்திக்கேயனை சாதாரணமாக பேச வைத்து, பின்னர் அதனை தொழில்நுட்ப உதவியுடன் பெண் குரலாக மாற்ற திட்டமிட்டிருக்கிறாராம் ரசூல்.


English summary
One of the most exciting projects under production is Sivakarthikeyan’s ‘Remo’ in which he is said to be donning multiple getups including that of a young lady. The dubbing work is commencing under the supervision of Oscar winner Resul Pookutty. Sources reveal that Siva will also dub in female voice using latest technology.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos