»   »  நல்ல வேள.. என் காலத்துல அல்லு அர்ஜூன் நடிக்க வரல! - சிவகுமார்

நல்ல வேள.. என் காலத்துல அல்லு அர்ஜூன் நடிக்க வரல! - சிவகுமார்

Posted by:
Subscribe to Oneindia Tamil

நான் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் வந்திருந்தால், எனக்கு பெரிய போட்டியாக இருந்திருப்பார் அல்லு அர்ஜூன் என்றார் நடிகர் சிவகுமார்.

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத் தொடக்க விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் பேசுகையில், "தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியுடன் படித்தவர். அவர் இன்று மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறார். அவர் சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். அவர் இவ்வளவு பெரிய தயாரிப்பாளராகி சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து திரைப்படத்தை தாயரிப்பார் என்று நான் நினைச்சி கூடப் பார்த்ததில்லை. இப்போது அவரை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

Sivakumar praises Allu Arjun

சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து படங்களை தயாரித்த அவர் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கும, தெலுங்கு சினிமாவுக்கும் பல வருடங்களாக நல்ல தொடர்பு இருந்து வருகிறது. எம். ஜி .ஆர் , சிவாஜி ஆகியோர் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அதே காலகட்டத்தில் என்.டி.ஆர் , நாகேஷ்வர ராவ் ஆகியோரும் இங்கே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இங்கும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தனர்.

அல்லு அர்ஜுன் மிகவும் அழகாக உள்ளார். அவருக்கு கண், காது, மூக்கு என அனைத்தும் அழகாக உள்ளது. நல்ல வேளை அவர் 1960ல் நடிக்க வரவில்லை. அப்படி வந்திருந்தால் எனக்குப் போட்டியாக வந்திருப்பார். முருகர் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று அக்காலத்தில் என்னை தேர்வு செய்தனர். இவர் அக்காலத்தில் இருந்திருந்தால் இவரைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்," என்றார்.

English summary
Actor Sivakumar has praised Allu Arjun for his personality and acting skills.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos